இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமான கேப்டன்களில் ஒருவர் ராகுல் ட்ராவிட். ஏனென்றால் இந்திய அணி மோசமான நிலைமையில் இருக்கும் போது பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்து தற்போது உள்ள இந்திய அணி உருவாக மிக முக்கியமான இரு காரணியாக இருந்தார். இந்நிலையில் இவருக்கு பிறகு தோனி கேப்டனாக ஆனவுடன் கடந்த 2007ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் அற்புதமான வெற்றியை பெற்று தந்தார் தோனி.

பின்னர் இந்த வெற்றி தொடர ஆரம்பித்து பல போட்டிகளில் வெற்றி பெற்ற தோனி 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் பல ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்று கொடுத்தார். இதற்கு பிறகு 2013ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியிலும் கோப்பையை வென்று கொடுத்த தோனி ஐபிஎல் போட்டியிலும் சென்னை அணிக்காக 5 கோப்பைகளை வென்றது கொடுத்தார். இந்நிலையில் இந்நிலையில் தான் சமீபத்தில் தற்போது இந்திய பயிற்சியாளராக இருக்கும் டிராவிட் தோனி குறித்து பேசியுள்ளார்.
டிராவிட் பேட்டி :
குணால் ஷாவுடனான உரையாடலில், கிரிக்கெட்டுக்கு அவர் எந்த மென்பொருளை உருவாக்க விரும்புகிறார் என்பதைப் பற்றி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிடிடம் கேப்ட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் “மக்களின் மனதிற்கு அழுத்தமான சூழ்நிலைகளில் என்ன நடக்கிறது என்பதை தான் தெரிந்து கொள்ள விரும்புவதாக ராகுல் டிராவிட் கூறினார். இது பற்றி அவர் பேசுகையில் “மனம் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிய நான் விரும்புகிறேன் என்று நினைக்கிறேன்.

விளையாட்டின் நுட்பம் மற்றும் திறமையின் அடிப்படையில் நாங்கள் வியூகங்கள் மற்றும் தந்திரோபாயங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன, மேலும் மாறிக்கொண்டே இருக்கிறோம். விளையாட்டின் நிலையை மேம்படுத்த நிபுணத்துவம், உடலியல் தரம், பயிற்சியாளர்கள், விளையாட்டு அறிவியல், மருந்துகள் என நிறைய மேம்பட்டு வருகிறது. இதே போல வீரர்கள் அழுத்தமான நேரத்தில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரு சாப்டவேர் கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும் என்றார் ட்ராவிட்
மேலும் இந்த உரையாடலின் போது இந்திய தலைமைப் பயிற்சியாளர் தோனியின் தீவிர அழுத்தத்தின் கீழ் நிலைத்து நிற்கும் திறனைப் பற்றி பேசினார். “அவர் என்ன நினைக்கிறார் என்பதை எப்படி தெரிந்து கொள்வீர்கள்? நீங்கள் சொன்னது போல் வரம்புகள் இல்லை என்றால். அழுத்தத்தில் தோனியின் தலைக்குள் என்ன நடக்கிறது? அவர் கடைசியில் எப்படி விளையாடுகிறார்? அவர் எப்படி யோசிக்கிறார் என்பதை பற்றி தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று வேடிக்கையாக பேசியுள்ளார் ராகுல் ட்ராவிட்.





