உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பாத்து கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் புள்ளி பட்டியலில் 5 இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியும் 1௦ இடத்தில ஆப்கானிஸ்தான் அணியும் நேற்று சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் மோதின. இவ்விரண்டு அணிகளும் கடந்த தோல்வியில் இருந்து மீண்டு வர முயற்சி செய்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் அணி கடைசி இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை தழுவியது.

அதே போல் ஆப்கானிஸ்தான் அணி கடைசி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவி உள்ளது. இந்த இரண்டு அணிகளும் செமி பைனலுக்கு செல்ல இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற சூழலில் சிக்கி இன்று போட்டியை விளையாடியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்வது அவர்களுக்கு சாதகமாகவே அமைந்தது. நீண்ட நாட்களாக தடுமாறி வந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் இந்த போட்டியில் அவருடைய சிறப்பான பேட்டிங்கின் மூலம் 50 ஓவர்களில் 282 ரன்களை குவித்தது.
பாகிஸ்தான் அணியின் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 74 ரன்களும், ஷபீக் 58 ரன்களும், இப்திகார் அகமது 40 ரன்களும் குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் நூர் 3 விக்கெட்டுகளையும் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளையும் நபி மற்றும் அஹமதுல்லா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

283 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கத்தில் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவரிலே மாபெரும் வெற்றியை அடைந்தது அணிக்கு அதிக பட்சமாகஇப்ராஹிம் சத்ரான் 87ரன்களும், ரஹ்மத் ஷா 77 ரன்களும், குர்பாஸ் 65 ரன்களும் குவித்தனர். பாகிஸ்தான் அணிக்கு பேட்டிங் சிறப்பாக அமைந்தாலும் பௌலிங் மற்றும் பீல்டிங் சுமாராகத்தான் இருந்தது.அப்ரிடி மற்றும் ஹாசன் அலி தலா ஒரு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தன.
Irfan Pathan dancing with Rashid Khan.
— Johns. (@CricCrazyJohns) October 23, 2023
– Video of the day from Chepauk…!!!pic.twitter.com/ijoMGqKht1
இந்த தோல்விக்கு காரணம் பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங் தான். 10 இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் அணி தற்போது 6 இடத்திற்கு முன்னேறி உள்ளனர். போட்டி முடிந்த பிறகு ஆப்கானிஸ்தான் அணியின் ரசிகர்களும் வீரர்களும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். அங்கு வர்ணனை செய்து கொண்டு இருந்த இர்பான் பதான் ரஷித் கானுடன் மைதானத்தில் நடனமாடினர். மேலும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.



