நேற்று முன்தினம் நடந்த 50வது ஐபிஎல் போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் விராட் கோலி 46 பந்துகளில் 55 ரன்களை விளாசிய விராட் 7000 ரன்கள் என்ற சாதனையும் படைத்தார். இந்நிலையில் ஆர்சிபி 181 ரன்களை குவித்தது. ஆனால் இரண்டாவதாக களமிறங்கிய டெல்லி அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடி வெறும் 16.4 ஓவர்களில் வெற்றியை பெற்றது. இந்நிலையில் தான் விராட் கோலி குறித்து இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாத்திரி பேசியுள்ளார்.

விராட் கோலி குறித்து சாஸ்திரி :
உங்களுடைய பேட்டிங் வேகமானவுடன் அதனை நிறுத்தாதீர்கள். மற்றவர்களை பற்றி கவலைப்படாதீர்கள். அதுதான் நான் விராட் கோலிக்கு கொடுக்கும் செய்தியாக இருக்கிறது. மற்ற வீரர்கள் தங்களுடைய வேலையே செய்யட்டும். சொல்லப்போனால் டி20 போட்டியில் அதிக பேட்ஸ்மேன்கள் தேவையில்லை. நீங்கள் பந்துகளை அடிக்கும் வேகத்தில் இருந்தால் அதை தொடர்ந்து செய்யவேண்டும். உதாரணமாக ஃபில் சால்ட் போல.’
ஃபில் சால்ட் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர் பந்துகளை அடிக்க தொடங்கியவுடன் நிறுத்தவில்லை என்று கூறினார். மேலும் பேசிய அவர் “இப்படி செய்வது மற்ற பேட்ஸ்மேன்களின் அழுத்தத்தை நீக்கியது. அதனால் மிட்செல் மார்ஷ் அல்லது ரிலீ ரூஸோ என அனைவரும் பெரிய ஷாட்டுகளை அடித்தார்கள். அதைத்தான் நான் விராட்டிற்கு சொல்ல விரும்புகிறேன். ஒரு முறை அடிக்க ஆரம்பித்துவிட்டல் உங்கள் டெம்போவை மாற்ற வேண்டாம் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று கூறினார் சாஸ்திரி.

ரோஹித் ஷர்மா குறித்து :
அதே நேரத்தில் ஐபிஎல் 2023ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் பற்றி பேசுகையில் “நீங்கள் சரியாக விளையாடி அதிக ரன்களை எடுத்தால் ஒரு கேப்டனாக வேலையும் சுலபமாகிவிடும். அதோடு மைதானத்தில் அந்த ரன்கள் உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். அதே நேரத்தில் நீங்கள் ரன்கள் எதுவும் எடுக்கவில்லை என்றால் அந்த எண்ணம் முற்றுலுமாக மாறி விடும். அது யாருக்கு நடந்தாலும் சரி அவர்களின் செயல்திறன் பாதிக்கப்படும் என்று கூறினார் ரவி சாஸ்திரி

ரோஹித் சர்மா இந்த சீசனில் 18.40 என்ற மோசமான சராசரியில் 184 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். வரும் மே 9 செவ்வாய் அன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பெங்களூரு அணி மும்பை அணி எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. சீசனின் இறுதிக் கட்டம் நெருங்கி வருவதால் இந்த இரு அணிகளுமீ மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற முனைப்போடு இருக்கும்.





