தற்போது நடந்து வரும் உலக கோப்பை தொடர்ந்து இந்திய அணி தொடக்கம் முதலே வலுவான அணியாக இருந்து வருகிறது. ஆனால் அனைத்தும் சரியாக சென்றுகொண்டிருக்கும் போதுதான் இந்திய அணியின் துணை கேப்டனும்,ஆல்ரவுண்டருமாகிய ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இது சிறிய காயமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் மருத்துவர்கள் ஹர்திக் பாண்டியாவை சில நாட்கள் ஓய்வெடுக்க கூறியுள்ளனர்.

இதனால் இன்று தர்மசாலா மைதானத்தில் நடக்க இருக்கும் இந்தியா vs நியூசிலாந்து போட்டியில் ஹர்திக் பாண்டியா கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்படுகிறது. மறுபுறம் நியூசிலாந்து அணி இந்த உலக கோப்பை தொடரில் மிகவும் வலுவான அணியாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் ஆடிய 4 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.
மேலும் அவர்களின் அணியின் தற்போது கட்சிதமாக இருக்கிறது என்பதினால் இன்று நடக்கும் போட்டி மிகவும் கடினமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் இந்த போட்டியில் யார் வெல்வார்கள் என்று ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளரும் வீரருமாகிய ரவி சாஸ்திரி கடந்த காலத்தில் தோனி கூறிய ஒரு விஷயம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் ” 2011ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா ஒரு ஆட்டத்தில் தோற்றது. அது நியூசிலாந்திற்கு ஒரு லீக் ஆட்டமாக இருந்தது, ஆனால் அவர்கள் உலகக் கோப்பையில் கோப்பையை வென்றனர். தோனி கேப்டனாக இருந்தபோது ஒருமுறை சொன்னது எனக்கு நினைவிருக்கிறது,
உங்களுக்குத் தெரியும், சில சமயங்களில் லீக் ஆட்டத்தில் உலகக் கோப்பையில். ஒரு ஆட்டத்தில் தோல்வியடைவது நல்லது என்று உங்களுக்குத் தெரியும், ஏனென்றால் நீங்கள் திடீரென்று சிக்கிக்கொண்டு பதர்த்தம் அடைய கூடாது. முன்கூட்டியே அதனை பழகியிருக்க வேண்டும். திஹான்ல் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் நாம் நடுங்க மாட்டோம் என்று தோனி கூறியதாக தெரிவித்தார் ரவி சாஸ்திரி.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் போட்டியை பொறுத்தவரையில் டாஸை வென்ற வென்ற இந்திய அணி பந்துவீச்சை முடிவு செய்தது. இதனையடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்களை எடுத்த நிலையில் தற்போது இந்தியா 152 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை அடுத்துள்ளது.



