இந்திய கிரிக்கெட் அணியின் அபாயகரமான பந்துவீச்சாளராக கருதப்படுபவர் ஜஸ்பிரித் பும்ரா, தனது அற்புதமான பந்துவீச்சினால் பெரிய பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்யும் திறன் கொண்டவர், ஆனால் அவர் கடத்த சில மாதங்களாக இந்திய அணி மற்றும் ஐபிஎல்லில் இருந்து வெளியேறி இருக்கிறார். இதற்கு முன்னர் ஜஸ்பிரித் பும்ரா தனது கடைசி ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுடன் 25 செப்டம்பர் 2022 அன்று விளையாடினார்.

அதற்கு பிறகு அவர் எந்த போட்டியில் விளையாடவில்லை, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கூட காயம் காரணமாக அவர் அணியிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது, அதன் பிறகு அவர் 2023 உலகக் கோப்பையிலும் அவரால் விளையாட முடியவில்லைஏனென்றால் வேகபந்துவீச்சாளர் பும்ரா ஸ்லிங் ஆக்ஷன் கொண்ட பந்துவீச்சாளர். இதனால் அவர் பந்துவீசும் போது முதுகில் அதிக அழுத்தம் கொடுக்கிறார்.
முன்னாள் வேஸ்ட் இண்டியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹோல்டங் கூட பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்படலாம் என்று கூறியிருக்கிறார். அப்படியொரு நிலையில் தான் பும்ரா விளையாட்டுகளில் இருந்து ஓய்வு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் காயத்திற்கு நியூசிலாந்தில் சிகிச்சை எடுத்த பிறகு பெங்களூருவில் உள்ள அதிசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியை மேற்கொண்டாற்.

மேலும் உலக கோப்பைக்கு பும்ரா தயாராக இருக்கிறார் என்று பிசிசி கூட தெரிவித்திருந்த்து. இதனையடுத்து மேற்கிந்திய தீவுகளுக்கு இந்தியா செல்லும் தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த விளையாடவில்லை. இருந்த போதிலும் உலககோப்பைக்கு முன்னதாக வரும் ஆகஸ்ட் மாதம் 18,20,23 ஆம் தேதிகளில் இந்தியா மற்றும் அயர்லாந்து இடையேயான போட்டியில் விளையாடவைத்து பரிசோதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் கிடையாது.

இப்படிப்பட்ட நிலையில் தான் பும்ரா குறித்து முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி பேசியுள்ளார். அவர் கூறுகையில் “இந்திய கிரிக்கெட் அணியில் பும்ரா மிகவும் முக்கியமான ஒரு வீரர். ஆனால் அவரை வேகமாக வருகின்ற உலககோப்பைக்கு தயார் படுத்துகிறோம் என்று அவசரப்படுத்தினீர்கள் என்றால் பின்னர் 4 மாதங்களுக்கு அவரை மீண்டும் இந்திய அணியில் இருந்து ஷஹீன் அப்ரிடி போல இழக்க நேரிடும்.
எனவே இது ஒரு சிறிய கயிறு போன்றது, இந்த விஷியத்தை பற்றி சரியாக யோசித்துதான் முடிவு செய்யவேண்டும் என்றார் ரவி சாஸ்திரி. ஒருவேளை உலககோப்பைக்கு முன்னர் பும்ராவுக்கு மீண்டும் காயம் ஏற்படும் பட்சத்தில் அது கண்டிப்பாக இந்திய அணிக்கு பெரும் இடியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.





