உலகில் உள்ள கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி மிகவும் பிரபலமான ஒரு கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார், ஏனென்றால் அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் மில்லியன் கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ளார் விராட். இந்த ரசிகர்களை தாண்டி வெளிநாட்லும் பிரபல யூடியூபர் IshowSpeed போன்ற பலரும் விராட் கோலியின் ரசிகர்களாக இருக்கிறார். மேலும் 1000 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்களையும் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் கிடைத்த தகவல்களின் படி விராட் கோலிக்கு அதிகமான வருமானம் வருவது அவருடைய இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கங்களில் இருந்து தான். மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் ஒப்பந்த வீரராக இருந்து சம்பளம் பெறுகிறார். அதோடு வருடா வருடம் நடக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய வீரராக பல காலமாக இருந்து வருகிறார்.
முன்னாள் இந்திய கேப்டனான விராட் கோலி பிசிசிஐயுடன் இணைந்து “ஏ+” கிரேடு ஒப்பந்தம் செய்துள்ளார். இதனை மூலம் அவருக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி சம்பாம் வருகிறது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு போட்டிக்கு ரூ.15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கான கட்டணமாக ரூ.6 லட்சமும், சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு டி20 போட்டிக்கு கட்டணமாக ரூ.3 லட்சமும் பெறுகிறார். ஐபிஎல்லில் ஆர்சிபிக்கு ஆடுவதினால் அவர் ஆண்டுதோறும் ரூ.15 கோடி சம்பாதிக்கிறார்.

மேலும் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் விராட் கோலிக்கு மும்பை ரூ. 34 கோடி சொத்துக்களும் மற்றும் குருகிராமத்தில் ரூ. 80 கோடி அளவில் சொத்துக்களும் உள்ளன. மேலும் ரூ.31 கோடி மதிப்புள்ள பல சொகுசு கார்களை வைத்துள்ளார் விராட் கோலி. இவைகளோடு முன்னாள் RCB கேப்டன் பல பிராண்டுகளை தன் கைவசம் வைத்திருக்கிறார். ப்ளூ ட்ரைப், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ், எம்பிஎல் மற்றும் ஸ்போர்ட்ஸ் கான்வோ மற்றும் இன்னும் பல ஸ்டார்ட்-அப்களில் முதலீடும் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Virat Kohli:
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 18, 2023
Net Worth – 1,050cr.
Per post charge – 8.9cr on Instagram, 2.5cr on Twitter.
Properties – 110cr.
Cars – 31cr. pic.twitter.com/0zy9CWZlS3
StockGro என்ற இணயதளம் கூறியது போல, கோலி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் ஒவ்வொரு இடுகைக்கும் முறையே 8.9 கோடி மற்றும் 2.5 கோடி வசூலிக்கிறார். ஒன்8 கம்யூன் உணவகம், நியூவா உணவகம், ஒன்8 ஆடை பிராண்ட், ராங் சொகுசு ஆடைகளுக்கான பிராண்ட் மற்றும் ஸ்டெபத்லான் கிட்ஸ் லைஃப்ஸ்டைல் பிராண்ட் உட்பட ஐந்து ஸ்டார்ட்அப்களை விராட் வைத்திருக்கிறார்.
இவற்றை தவிர்த்து கோலி எஃப்சி கோவா கால்பந்து கிளப், டென்னிஸ் அணி மற்றும் மல்யுத்த சார்பு அணி ஆகியவற்றின் இணை உரிமையாளராகவும் இருக்கிறார். மேலும் 18 பிராண்டுகளுக்கு மேல் ஒப்புதல் அளித்து ஆண்டுக்கு ரூ.7.50 முதல் 10 கோடி வரை கட்டணமாக வசூலிக்கிறார். Vivo, Blue Star, Luxor, HSBC, Uber மற்றும் MRF ஆகியவை அவரால் விளம்பரப்படுத்தப்படும் முக்கிய பிராண்டுகள் என்பது குறிப்பிடதக்கது.





