இந்திய கிரிக்கெட் அணியானது வரும் ஆசிய போட்டிகளை கலந்து கொள்ள இருக்கிறது. இதில் ஆடும் இந்திய அணியின் கேப்டனாக ருத்துராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்ட நிலையில் ஐபிஎல் 2023 தொடரில் அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ரிங்கு சிங் பல ஆண்டுகளால கிரிக்கெட் ஆடி வருகிறார் ஆனால் அவருக்கு பெரிய வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை.ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் விளையாடினாலும் அவருக்கு வாய்ப்பு எதோ ஓன்று இரண்டு போட்டிகளில் தான் கிடைத்தது.

அப்படிப்பட்ட நிலையில் தான் 2023 ஐபிஎல் தொடரில் அதிரடியா பேட்டிங் செய்தது அவரின் வாழ்க்கையை மாற்றியது என்று கூறலாம். இதான்ல் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது மட்டுமல்லாமல் தற்போது இந்திய அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள ரிங்கு சிங் இது தோனி தனக்கு கொடுத்த அட்வைஸ் குறித்து பேசியுள்ளார்
ரிங்கு சிங் தோனி குறித்து கூறியது :
அவர் கூறுகையில் “மஹி பாய் உடன் உரையாடல் உண்மையில் அற்புதமாக இருந்தது. நான் 5 அல்லது 6வது இடத்தில் பேட்டிங் இறங்குவது போன்றுதான் தோனியும் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் பல காலம் அங்கு இறங்கி விளையாடிய அனுபவம் இருக்கிறது.எ வருக்கு அங்கே எப்படி விளையாட வேண்டும் என்று உள்ளிருந்து வெளியே அனைத்தும் அத்துப்புடி. நான் அவரிடம் எப்படி என்னுடைய பேட்டிங்கை இன்னமும் நன்றாக விளையாடுவது என்று கேட்டேன்.

அதற்கு மஹேந்திர சிங் தோனி கூறிய அறிவுரை மிகவும் எளிமையானது. அவர் கூறினார் “நீங்கள் நன்றாகவே பேட்டிங் செய்கிறீர்கள் தொடர்ந்து இந்தனை காலம் என்ன செய்தேர்களோ அதே போன்று விளையாடுங்கள் என்று தோனி கூறியதாக ரிங்கு சிங் இந்த பேட்டியின் போது தெரிவித்தார்.

பல நாள் கனவு :
மேலும் பேசிய அவர் கூறுகையில் “எனக்கு தெரியும் நான் இந்தியாவின் ஜெர்சியை அணிவதில் என்னை விட என்னுடைய குடும்பமும், பெற்றோர்களும் மகிழ்ச்சியான ஒருவராக இருப்பார்கள் என்று. அவர்கள் இதற்காக பல காலம் காத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் கஷ்டப்பட்டது நன்றாகவே தெரியும். அவர்கள் என்னுடைய எல்லா கலங்களிலும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். நான் இந்திய அணியின் ஜெர்சியை அணியின் போது அவர்களுக்கு அதனை சமர்ப்பிக்கிறேன் என்றார் ரிங்கு சிங்
NEWS 🚨- Team India (Senior Men) squad for 19th Asian Games: Ruturaj Gaikwad (Captain), Yashasvi Jaiswal, Rahul Tripathi, Tilak Varma, Rinku Singh, Jitesh Sharma (wk), Washington Sundar, Shahbaz Ahmed, Ravi Bishnoi, Avesh Khan, Arshdeep Singh, Mukesh Kumar, Shivam Mavi, Shivam…
— BCCI (@BCCI) July 14, 2023
அனைவருக்கும் இந்தியாவிற்க்க ஆடவேண்டும், இந்தியாவின் ஜெரியை அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். நான் எதிர்காலத்தை பற்றி அதிகமாக யோசிக்க போவதில்லை. ஏனென்றால் அதனை பற்றி யோசித்தால் மேலும் மேலும் கடமைகள் நம்மீது வைக்கப்படும். என்னுடைய வாழ்க்கையை ஒரு நாள் போலத்தான் நானா பார்க்கிறேன். அதே சமயம் தொழில் முறையாக கிரிக்கெட் விளையாடும் அனைவரும் தங்களுடைய நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்றார்.





