இந்திய அணியானது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை அயர்லாந்து அணியுடன் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முன்னாள் போட்டியில் ஏற்கனவே இந்தியா டக் வெல்த் முறையில் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த போட்டி நாளை நடைபெற இருக்கிறது. மேலும் இந்த தொடரில் 2024 வரும் உலக கோப்பையை கருத்தில் கொண்டு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது அவர்களில் ஒருவர் தான் ரிங்கு சிங்.

சாதாரண குடும்பத்தை சேர்ந்த ரிங்கு சிங் தன்னுடைய கடுமையான உழைப்பினால் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். மேலும் வளர வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மேலும் இப்படியே வரும் போட்டிகளில் சிறப்பாக செய்யப்படும் நிலையில் வரும் 2024 உலக கோப்பை போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கும் என்றே சொல்லலாம்.
ஒரு கட்டத்தில் துடைக்கும் வேலைக்கு செல்ல இருந்த ரிங்கு சிங் அது வேண்டாம் என்று படிப்படியாக முன்னேறி ஐபிஎல் போட்டிகளில் 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். சொல்லப்போனால் அதுதான் குறைந்த பட்ச விலை. இருந்தாலும் அந்த 20 லட்சத்திலிருந்து 80 லட்சத்திற்கு கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்ட அவர் 2022 ஆம் ஆண்டு மீண்டும் KKR அணியால் 55 லட்சத்திற்கு வங்கக்கப்பட்டார்.

ஆனால் இருந்த போதிலும் வாய்ப்பு சிறிதளவே கிடைத்து வந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்கள் அடுத்து சரித்திரம் படித்த ரிங்கு சிங்கி இன்னமும் யாராலும் மறக்க முடியாது. கடைசி கட்ட ஓவர்களில் அவரது அதிரடி மிகச் சிறப்பாக இருப்பதால் தொடர்ச்சியாக அவர் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்று ரசிகர்களும் ஆதரவு தந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அயர்லாந்து தொடரில் தான் சிறப்பாக செயல்பட்டு வரும் விதம் குறித்து பேசியுள்ள ரிங்கு சிங் கூறுகையில் ‘அயர்லாந்து அணிக்கு எதிராக தற்போது நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறோம். மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று முழுமையாக கோப்பையினை வெல்வோம் என நம்புகிறேன். முதல் ஆட்டத்தில் விளையாட ஆவலுடன் காத்திருந்தேன். ஆனால் மழையால் என்னால் பேட்டிங் செய்ய முடியாமல் போனது.

பிறகு இரண்டாவதாக எனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விளையாடி உள்ளேன். ஐபிஎல் போட்டியில் 5 சிக்சர்களை அடித்தது தான் எனது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அந்த தருணத்தை ரசிகர்கள் இன்றளவும் மறக்காமல் நினைவில் வைத்து என் மீது அன்பை பொழிந்து வருகிறார்கள். அதன் காரணமாகவே நான் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன் என ரிங்கு சிங் நெகிழ்ச்சியான சில கருத்துக்களை பேசியது குறிப்பிடத்தக்கது.




