அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. கடந்த 2011 உலககோப்பை போல இந்த முறையும் வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா. ஆனாலும் இந்தியாவில் அணியின் வீரர்களும் காயம் ஏற்படும் பிரச்னை என்பது மிகவும் மோசமான ஒன்றாக இருந்து வருகிறது.

குறிப்பாக இந்தியாவின் நம்பர் 4 இடத்தில் சரியாக பொருந்தி இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் இன்னும் முழுமையாக குணமடையாமல் இருப்பதும் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ஏனென்றால் யுவராஜ் சிங், ரெய்னா, கெளதம் கம்பீர் போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் வெற்றியில் முக்கிய பங்காற்றிய நிலையில் தற்போதைய பேட்டிங் வரிசையில் அனைவருமே வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பதும் மற்றொரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது.
மேலும் ரிஷப் பண்டிற்கும் ஏராளமான வாய்ப்புகளை வழங்கி வந்தது இந்தியா. இந்த நிலையில் பும்ரா முழுமையாக குணமடைந்து அயர்லாந்து டி20 தொடரில் கேப்டனாக களமிறங்கும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் என்சிஏவில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பெங்களூருவில் இருக்கும் எம்சிஏவில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் முழுமையாக விளையாடி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலயில் தான் அவர்கள் விளையாடுவதை வீடியோவாக எடுத்த ரிசப் பண்ட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதன் கீழே அந்த பயிற்சி போட்டியில் அவர் விளையாடாமல் வேடிக்கை மட்டுமே பார்த்தார் என்பதையும் குறிப்பிட்டுளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தை சந்தித்தனர். அதற்கு முக்கியமான ஒரு காரணம் என்றால் ரிஷிப் ப பண்ட் துரதிஷ்டவசமாக கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார்.
Rishabh Pant enjoys watching teammates KL Rahul and Shreyas Iyer in action.
— Circle of Cricket (@circleofcricket) August 14, 2023
Great signs for #TeamIndia and Indian cricket 🤞
📹: @RishabhPant17 pic.twitter.com/egAKUrtzfp
மற்ற வீரர்களைப் போல் இல்லாமல் விக்கெட் கீப்பராக இருப்பதால் அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே விரைவாக குணமடிந்தாலும் அவரால் விக்கெட் கீப்பர் செய்யும் சில நுணுக்கமான செயல்களை செய்ய முடியாது. மேலும் சமீபத்தில் கூட இசாந்த் சர்மா 2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுப்பார் என்ற உண்மையை வெளிப்படையாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இதனால் ரிஷப் பண்ட் 2023 உலக கோப்பையில் விளையாட மாட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும் இந்த விடீயோவில்னால் கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் பயிற்சி போட்டிகளில் விளையாடும் நிலையில் அவர்கள் இருவரும் விரைவில் கம்பீக கொடுப்பார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.





