டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றது. இந்திய அணிக்கு கோப்பை என்பது கனவாகவே இருந்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் கோப்பையில் வேண்டுமென்று இந்திய அணி முனைப்போடு இந்திய அணி விளையாட உள்ளது.

டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு அணிகள் இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது. அது மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு பிறகு அதிக அணிகளை கொண்ட உலக கோப்பை போட்டியாகவும் இது அமைய உள்ளது. அந்த அளவிற்கு உலகக் கோப்பை போட்டியில் 20 அணிகள் கலந்து கொள்ள தயாராகி உள்ளது.
இந்திய அணி உலகக்கோப்பை டி20 போட்டிக்கு கடந்த வருடம் முதல் இருந்து தயாராகி வருகிறார்கள். அதற்கு முதற்கட்டமாக இந்திய அணி t20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா டி20 அணியின் கேப்டனாக நியமித்தது. அதன் பின் இந்திய ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் ஒன்றில் கூட விளையாடவில்லை. அடுத்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் அவர் அணியில் இருப்பாரா இல்லையா என்பது கேள்வி கூறியாக இருந்து வருகிறது.

இருப்பினும் தற்போது ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் யார் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட போகிறார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் இடையே இருந்து வந்துள்ளது. இந்திய t20 அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய கட்டாயம் அணியில் இருக்க வேண்டும் என்று முன்னால் இந்திய வீரர்கள் பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே கூறுகையில்,
ரோகித் மற்றும் கோலி இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கும் காரணமாக, இருநாட்டு டி20 தொடர்கள் முக்கியம் கிடையாது என்று அர்த்தம் கிடையாது. ஒவ்வொரு வீரரும் பேலன்ஸ் செய்ய வேண்டிய அவசியம் சோதனையும் செய்து வருகின்றது என்று கூறுகிறேன். அதுவும் நாம் யாரைப் பற்றி பேசுகிறோம் என்பது தான் முக்கியம். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
வீரர்கள் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன். இப்போதும் நீங்கள் எந்த வேகப்பந்து வீச்சாளர் அல்லது சுழற்பந்து வீச்சாளரைக் கேட்டால், நீங்கள் எந்த வடிவத்தில் சிறந்து விளங்க விரும்புகிறீர்கள் என்று கேட்டால், அவர் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுப்பார். ஆம், வெளிப்படையாக, சில பந்து வீச்சாளர்கள் வெள்ளை பந்து வடிவமைப்பை தேர்வு செய்வார்கள். அவர்கள் அநேகமாக எல்லா வடிவங்களிலும் விளையாடியிருப்பார்கள், பின்னர் அவர்களது ஆட்டமும் திறமையும் வெள்ளை பந்து வடிவத்திற்கு மிகவும் பொருத்தமானது என்று முடிவு செய்திருப்பார்கள். இப்போது அது ஒரு தனிப்பட்ட அழைப்பாக இருக்கும், அதைப் பற்றி யாரும் எதுவும் செய்ய முடியாது.




