கடந்த 2019 உலகக்கோப்பை தொடரில் தற்போது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்க ஆட்டக்கார இருந்த அவர் போட்டிகளில் 648 ரன்கள் எடுத்தார். மேலும் அந்த உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்தவராகவும் தொடரை முடித்தார். எனவே, போட்டியின் வரவிருக்கும் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக ரோஹித் சர்மா மீண்டும் அதே போன்று திரும்பி வர விரும்புவதாக சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அவர் கூறுகையில் “என்னைப் பொறுத்தவரை, நான் எப்படி என்னை நிதானமாக வைத்துக்கொள்கிறேன் என்பது முக்கியம், நேர்மறையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளிப்புற காரணிகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. நான் எல்லாவற்றையும் மூட விரும்புகிறேன். 2019 உலகக் கோப்பைக்கு முன் நான் இருந்த கட்டத்திற்கு வர விரும்புகிறேன்,” என்று ரோஹித் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
அப்போது நான் சிறந்த மனநிலையிலிலும் மற்றும் போட்டிக்கு நன்றாக தயாராகி இருந்தேன். அதே போல இப்போதும் நான் நல்ல மனநிலையில் நல்ல மனநிலையை மீண்டும் கொண்டு வர விரும்புகிறேன். அதைச் செய்ய எனக்கு நேரம் இருக்கிறது. 2019 உலகக் கோப்பைக்கு முன்பு ஒரு கிரிக்கெட் வீரராக நான் செய்த சரியான விஷயங்கள் என்ன என்பதை நினைவுபடுத்த முயற்சிக்கிறேன். மேலும் அப்போது எனக்கு தோன்றியவற்றை தனிப்பட்ட முறையில் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றார் ரோஹித் சர்மா.

மேலும் பேசிய அவர் ஆசிய கோப்பை அணியில் இருந்து யுஸ்வேந்திர சாஹல் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறித்தும் பேசினார். ஆவர் கூறுகையில் “சிறந்த அணியை தேர்ந்தெடுக்கும் போது, பல்வேறு காரணங்களுக்காக தவறவிடப்படும் வீரர்கள் குறித்து ராகுல் பாய் (டிராவிட்) மற்றும் நானும் சில வீரர்கள் ஏன் அணியில் இல்லை என்பதை வீரர்களுக்கு விளக்க எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம்.
அணியானது அறிவிக்கப்பட்ட பின்னர் ஒவ்வொரு வீரர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். நாங்கள் அவர்களுடன் நேருக்கு நேர் பேசு அவர்களை நாங்கள் ஏன் தேர்ந்தெடுக்க வில்லை என்பது குறித்து பேசியதாக ரோஹித் சர்மா கூறினார். மேலும் அவர் பேசுகையில் ” 2011 உலக கோபப்பியில் நான் தேர்வு செய்யப்படாதபோது, அது எனக்கு மிகவும் இதயத்தை உடைக்கும் தருணமாக இருந்தது, மேலும் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு என்ன மிச்சம் என்று உணர்ந்தேன்? என்று தெரிவித்தார் ரோஹித் சர்மா.
இந்நிலையில் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா விளையாட இருக்கிறது. இந்த போட்டியானது வரும் உலக கோப்பை தொடரில் ஆசிய அணிகளுக்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.



