இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் 3 வது போட்டியில் தொடக்க வீரர்கள் தடுமாறிய நிலையில் திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவதும் இணைத்து சிறப்பாக விளையாடினார்கள்.

இந்நிலையில் ப்ளோரிடாவில் இன்று நடந்து முக்கியமான 4வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஏனெனென்றல் ஆடுகளமானது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 178/8 ரன்களை விளாசியது. இதனையடுத்து 179 என்ற இலக்கை துரத்த களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த போட்டியில் வெற்றியடைந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது.
ஆனால் அந்த அழுத்திலும் தொடக்க வீரர்களுக்காக கமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்தனர். சொல்லப்போனால் இவர்களை ஆட்டமிழக்க செய்ய சில நேரங்கள் வந்தாலும் அதனை தவறவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியால் இந்த போட்டியில் வெல்ல முடியவில்லை. இந்த நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பேசுகையில் தங்களின் தோல்விக்கு என்ன ஆரணம் என்பதையும், அடுத்த போட்டியில் என்ன செய்ய போகிறார்கள் என்பது பற்றியும் பேசியிருந்தார்.

அவர் கூறுகையில் “இந்த மைதானம் பேட்டிங்கிற்கு நன்றாக ஒத்துழைத்தது. நாங்கள் இந்த போட்டியில் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். இந்த போட்டியில் ஹெட்மயர் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடினர். எங்களிடம் தரமான பந்துவீச்சு கூட்டணி இருந்தும் எங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்த முடியவில்லை. அதேபோன்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நாங்கள் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டியது அவசியம்.
மிடில் ஓவர்களில் நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. ஸ்பின்னர்களுக்கு எதிராக இன்னும் நாங்கள் பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும்.சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மிடில் ஓவரில் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க முடியாமல் தடுமாறியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது. தற்போது இந்த தொடரானது இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் உள்ளது. நாளைய இறுதிப்போட்டியில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம் என ராவ்மன் பவல் கூறியது குறிப்பிடத்தக்கது.





