உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் திருவிழா மார்ச் 22 அன்று தொடங்கி தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று ஏழாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைடன்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. சென்னை அணி இதற்க்கு முன்பாக முதல் போட்டியில் பெங்களூரு அணியை எளிதாக வெற்றி பெற்றும் அதேபோல குஜராத் அணி மும்பை அணியிடம் வெற்றி பெற்றும் இந்த போட்டியில் களம் காண்கின்றனர்.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார். ஆனால் அது அவர் நினைத்ததற்கு எதிராகவே அமைந்தது.ஆரம்பம் முதல் இறுதி வரை குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை நான்கு பக்கமும் சிதறடித்து வந்தனர்.அதிரடி ஆட்டுக்காரர் ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 46 ரன்களை அடித்து அரை சதத்தை இழந்து ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பின்பு வந்த நின்று நிதானமாக ரஹானே 12 ரன்களில் அவர் சாய் கிஷோர் இடம் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

அதன் பின்பு நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்துகளின் 46 ரன்களில் அரை சதத்தை இழந்து வெளியேறினார். அதன் பின்பு வந்த அதன்பின் மற்றொரு பக்கம் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த சுபம் துபே 23 பந்துகளில் 51 ரன்களை அடித்து குஜராத் அணியை சிதற அடித்து இருந்தார். அதில் ஐந்து சிக்சர்களும் இரண்டு பவுண்டரின் அடங்கும். அதன் பின்பு ஐபிஎல் புதிதாக களம் இறங்கிய சமீர் ரிஸ்வி t20 பந்துவீச்சாளர்களில் முதல்தரத்தில் இருக்கும் ராஷித் கானை வந்த உடனே முதல் பந்திலே சிக்ஸர் அடித்து தனது ipl-ல் ரன் கணக்கு தொடங்கினார்.
அதன் பின் பேட்டிங் செய்த குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனவே குஜராத் அதில் குஜராத் அணி சார்பில் சாய் சுதர்ஷன் 37 ரன்களும் மில்லர் 21 ரன்களும் சாஹா 21 ரன்களை மட்டுமே அடித்து இருந்தார் எனவே சென்னை அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் சஹார் தேஷ்பாண்டே மற்றும் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளையும் மிட்சல் மற்றும் பத்திரனா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

போட்டி வெற்றி குறித்து சஹார் கூறுகையில், நான் விளையாடும் காலத்திலிருந்தே, நான் பவர்பிளேயில் 3 ஓவர்கள் வீசுகிறேன், பழகிவிட்டேன், புதிய விதிகளுடன் முடிந்தவரை சிறப்பாக பந்து வீச முயற்சிக்கிறேன். முன்னதாக, நீங்கள் முதல் 2-3 பந்துகளில் ஒரு பவுன்சரை வீசினால், ஒரு ஃபுல் லெந்த் பந்துக்கு பேட்டர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள், ஆனால் ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்கள் அனுமதிக்கப்படும் இந்த புதிய விதி, அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உதவுகிறது. ஆனால் தற்போது பனி அதிகம் இல்லை. பந்தில் கிரிப் மற்றும் பவுன்ஸ் இல்லை. இந்த நாட்களில் நான் மஹி (எம்எஸ்டி) பாயையும் ருதுராஜையும் பார்க்க நேர்ந்தது என்று அவர் கூறினார்.




