உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 40வது போட்டியை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் குஜரத் டைட்டன்ஸ் அணியும் மோதியது. இந்த இரு அணிகளும் இதற்க்கு முன் மோதிய போட்டியில் டெல்லி அணி தான் வெற்றி பெற்று இருந்தது. அது மட்டும் அல்லாமல் இந்த இரு அணிகளும் புள்ளி பட்டியலில் கீழே தான் இருந்து வருகிறது. குஜராத் அணி 6வது இடத்திலும் டெல்லி அணி 8 வது இடத்திலும் இருந்துஹ் வந்தது.

20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்களை குவித்து இருந்தது. இவ்வளவு பெரிய இமாலய ரன்களை குவிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் பட்டேல் தான்.அதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 88 ரன்களையும் அக்சர் பட்டேல் 66 ரன்களையும் அடித்து இருந்தார். குஜரத் அணி சார்பில் வாரியார் 3 விக்கெட்டுகளையும் நூற் அகமது 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தார். குஜரத் அணியின் அனுபவம் வாய்ந்த வீரர் மோஹிட் ஷர்மா விக்கெட் ஏதும் எடுக்காமல் 73 ரன்களை அவர் விட்டு கொடுத்து இருந்தார்.
அதன் பின் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் வரை போராடி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 65 ரன்களும் மில்லர் 55 ரன்களையும் அடித்து இருந்தார்.சாஹா 39 ரன்களை அவர் அடித்து இருந்தார். கேப்டன் தனது 100வது போட்டியில் 6 ரன்னிலே வெளியேறி அணிக்கு ஏமாற்றத்தை அவர் அளித்து இருந்தார்.டெல்லி அணி சார்பில் ரஷிக் 3 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் மற்றும் நோர்கிய அக்சர் படேல் மற்றும் முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்து இருந்தார். எனவே டெல்லி அணி 4 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.

சாய் சுதர்ஷன் ஆட்டம் குறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில், ஷுப்மான் கில் மீண்டும் ஒருமுறை ரன் அவுட் ஆனார். கேப்டன் ஆட்டமிழந்து போனால், பேட்டிங்கில் அவ்வளவு ஆழம் இல்லை என்று நாங்கள் மீண்டும் மீண்டும் கூறுகிறோம். ஆனால், விருத்திமான் சாஹா இந்த முறை தைரியமாக ஆட்டமிழந்தார். சாய் சுதர்சன் மிகவும் நன்றாக விளையாடுகிறார், மிக சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் பின்காலில் இருந்து நிறைய ஷாட்களை ஆடுவதால் அவர் நன்றாக ஸ்பின் விளையாடுகிறார்.

நீங்கள் ஷாட்டை தாமதப்படுத்தினால், நீங்கள் தாமதமாக விளையாடலாம். நீங்கள் ஆரம்பத்தில் அடித்தால், நீங்கள் கவர் நோக்கி விளையாடலாம். ஆஃப் மற்றும் லெக் சைடில் சிறந்த ஆட்டத்தை அவர் பெற்றுள்ளார். அவர் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாகவே விளையாடி இருந்தார் என்றும் அவர் கூறினார்





