உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 24வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஜெய்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்தது. ராஜஸ்தான் அணிஇதற்க்கு முன்பு நடைபெற்ற அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் குஜராத் அணி ஐந்து போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 20வது ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களை அடித்து இருந்தனர். ஆரம்பத்தில் ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும் பட்லர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினாலும் அதன் பின் சஞ்சு சாம்சனுடன் இணைந்து ரியான் பாராக் அதிரடியை காட்ட தொடங்கினார். ரியான் பராக் 48 பந்துகளில் 76 ரன்களையும் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 68 ரன்களையும் அடித்து இருந்தனர். போட்டியின் இடையில் 180ரன்களே வருமா என்ற கேள்வி இருந்தது.
ஆனால் அதன் பின் வந்த ஹெட்மெயிர் 5 பந்துகளில் 13 ரன்களை அவர் அடித்து இருந்தார் . எனவே தான் ராஜஸ்தான் அணி 196 ரன்களை அடித்து குவித்து இருந்தது. 197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்ததது. ஒரு பக்கம் கேப்டன் கில் மட்டும் தனியாக நின்று போராடி இருந்தார். இருப்பினும் அவராலும் போட்டியை இறுதி வரை எடுத்து செல்ல முடியவில்லை. அவர் 44 பந்துகளில் 72 ரன்களை அடித்து இருந்தார். அவரை தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதற்க்கு அடுத்த படியாக சாய் சுதர்ஷன் 29 பந்துகளில் 35 ரன்களை மட்டுமே அவர் அடித்து இருந்தார்.

இருப்பினும் இறுதியில் ராஷித் கான் மற்றும் திவெட்டியா இணைந்து அணியை வெற்றி பெற வைத்தனர். கடைசி 1 பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராஷித் கான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்பந்தை பவுண்டரிக்கு அடித்து அணியை வெற்றி பெறவைத்தார். போட்டியின் இடையில் போட்டியை ராஜஸ்தான் அணி தான் போட்டியை கைப்பற்றியது என்று நினைத்து கொண்டு இருந்த நிலையில் இந்த இருவரின் பார்ட்னர்ஷிப் தான் அணியை வெற்றி பெற வைத்தது. திவாட்டியா 22 ரன்களும் ராஷித் கான் 24* ரன்களையும் அடித்து குஜரத் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்
போட்டி குறித்து தமிழக வீரர் சாய் சுதர்ஷன் கூறுகையில் முதல் இன்னிங்சில் சில ரன்கள் கூடுதலாக கொடுத்தோம் ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஒரு நல்ல பவர்பிளேயைப் பெறுவது எங்கள் திட்டங்களில் ஒன்றாக இருந்தது. இது ஒரு நல்ல பவர்பிளேயாக இருந்தது. பின்னர் அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்தோம். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது, நாங்கள் விளையாட்டை வென்றோம். இந்த விக்கெட்டில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல,

ஆனால் முதல் இன்னிங்ஸுக்குப் பிறகு அது கொஞ்சம் சிறப்பாக இருந்தது, எனவே எங்கள் ஹிட்டர்களுக்கு சில ஷாட்களை அடித்து நொறுக்குவது எளிதாக இருந்தது. இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் அவசியமானது மற்றும் எங்களுக்கு வேகத்தை அளிக்கிறது. இன்னும் சில நல்ல கேம்களை விளையாடுவோம், நல்ல சீசன் இருக்கும் என்று நம்புகிறோம்என்று அவர் கூறினார்




