பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல் ரவுன்டர் சோயப் மாலிக் பாகிஸ்தான் அணிக்கு பல முக்கிய தருணங்களில் பாகிஸ்தான் அணியை அவர் வெற்றி பெற வைத்துள்ளார். தற்பொழுது இந்திய அணியின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து பற்றி வெளியேற செய்திகளுக்கு மத்தியில் அவர் நடிகை சனா ஜாதத்துடன் திருமணம் செய்ய செய்து கொண்டார். இவருடைய திருமணம் தான் உலகெங்கிலும் தற்போது பேச பொருளாக இருந்து வருகிறது.

அவர் திருமணம் செய்து கொண்ட அடுத்த சில மணி நேரங்களில் டி20 போட்டியில் அவர் விளையாட சென்று விட்டார் அதில் அவர் மாபெரும் சாதனை ஒன்றையும் அவர் கடந்துள்ளார். டி20 கிரிக்கெட் 13 ஆயிரம் பெண்களை கடந்த முதல் ஆசிய வீரர் என்று பெருமையையும் உலகம் முழுவதும் அதிக ரன்களை எடுத்து வீரர் பட்டியலில் இரண்டாவது இடத்திலும் அவர் இருந்து வருகிறார்.உலக அளவில் ஒட்டுமொத்த டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெயில் 14,562 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

அவரைத் தொடர்ந்து சோயப் மாலிக்கும், பின்னர் பொல்லாடும் அதன் பின்னர் நான்காவது இடத்தில் விராட் கோலியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. பாக்கெட் பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் அவர் இந்த சாதனையை செய்து முடித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான இவர் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு அறிவித்தார்.
ஆனால் டி20 தொடர்களில் மட்டும் அவர் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய வருகிறார் சிறப்பான ஆட்டத்தால் இந்த வருடம் நடைபெற உள்ள டி20 உலக கோப்பையில் அவர் பாகிஸ்தான் அணியில் இடம் பெறுவார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். விவாகரத்து பற்றி பல நாட்கள் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டு வந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாகிஸ்தான் நடிகை அவர் திருமணம் செய்து கொண்டார்.

இந்த செய்தி குறித்து சானியா மிர்சா இன்ஸ்டாகிராமில் ஓரு ஸ்டோரி ஒன்றை பதிவு செய்து இருந்தார். சானியா தனது தனிப்பட்ட வாழ்க்கையை எப்போதும் மக்கள் பார்வையில் இருந்து விலக்கி வைத்துள்ளார். இருப்பினும், சோயப்பும் தானும் விவாகரத்து பெற்று சில மாதங்களே ஆனதை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இன்று எழுந்துள்ளது. ஷோயப்பின் புதிய பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். அவரது வாழ்க்கையின் இந்த முக்கியமான காலகட்டத்தில், அனைத்து ரசிகர்களும் நலம் விரும்பிகளும் எந்தவிதமான ஊகங்களிலும் ஈடுபடுவதைத் தவிர்த்து, அவரது தனியுரிமைக்கான தேவையை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மிர்சா குடும்பம் & குழு சானியா என்றும் அவர் பதிவு செய்து இருந்தார்.




