இந்தியா vs ஆஸ்திரேலியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியானது ஓவலில் நடந்தது இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது. இது னைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது. கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு 2013 சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா ஐசிசி இறுதிப் போட்டியை எம்எஸ் தோனி தலைமையிலான அணி இங்கிலாந்தை வீழ்த்தி வென்றது. அதற்கு பிறகு எந்த ஐசிசி கோப்பைகளையும் வெல்லாத நிலையில் இந்த போட்டியில் அது மாறும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது.

மேலும் இதனை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவையும், சரியாக விளையாடாதா சுப்மன் கில், புஜாரா, கோலி உள்ளிட்டோரையும் கடுமையாக விமர்சித்தனர். பல முன்னாள் வீரர்கள் கூட கேப்டன்சியை மாற்றவேண்டும் என்றும் புதிய டெஸ்ட் அணியை தயார் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வாய்த்த நிலையில் தான் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான மஞ்ச்ரேக்கர் சோர்வடையாத வீரர்களைத் தேடுமாறு இந்திய அணியை வலியுறுத்தியுள்ளார்.
அவர் சமீபத்தில் பேசிய பேட்டியில் “உலக சாம்பியன் ஷிப் போட்டியின் இறுதிப் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் விளையாட்டை மாற்றியவர்கள் – ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் போன்றவர்கள் தான். அவர்கள் T20 கிரிக்கெட்டை அதிகம் விளையாடுவதில்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து விளையாடி வருகின்றனர். இதனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுபவர்கள் பனிச்சுமை குறைவதினால் அவர்களினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்த முடிகிறது.

எனவே அவர்களை போன்று சோர்வடையாத அல்லது டெஸ்ட் கிரிக்கெட் மட்டுமே கவனம் செலுத்தும் வீரர்களை கண்டுபிடியுங்கள்.முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வெகுமதி அளித்து ரன்களுக்கு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் டெஸ்ட் வீரர்களாக வெளிநாட்டு சூழ்நிலைகளில் வெற்றிபெறும் வீரர்களை நம்மால் பார்க்க முடியும். வரும் போட்டிகளில் குறைந்தது மூன்று புதிய பேட்டர்கள் மற்றும் புதிய வேகப்பந்து வீச்சாளர்கள் விளையாடுவதை நான் பார்க்க விரும்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.
வரும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணமாக இந்தியா செல்ல இருக்கிறது. இதன் போது அவர்கள் இரண்டு டெஸ்ட், மூன்று ODIகள் மற்றும் ஐந்து T20I போட்டிகளில் விளையாடுவார்கள். மேலும் புதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் (2023-25) மேற்கிந்தியத் தீவுகளுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதல் போட்டியாகும். எனவே இந்திய அணி முதல் போட்டியிலேயே வெற்றியை பெற நினைக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது.




