உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. நேற்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது . இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக நேற்று ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது.

இந்த போட்டியில் இந்தியா துரதிஷ்ட வசமாக பெரும் தோல்வியை தழுவியது. இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் இது போன்று சொதப்பியது இந்திய ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை. மேலும் ஆஸ்திரேலிய அணியாது 6 முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. இந்திய அணி லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் இந்த போட்டி குறித்து பேசிய சஞ்சய் மஞ்சுரேகர் கூறுகையில் “இந்தியா டாஸ் இழந்தது, எனக்கு மிகப்பெரிய காரணியாக இருந்தது, போட்டிக்கு முன் ஆடுகளத்தைப் பார்த்த அனைவரும், பலவீனமான அணியான ஆஸ்திரேலியாவுக்கு அதிக வெடிமருந்துகளை கொடுத்ததாக உணர்ந்தோம். ஒரு உதாரணம் சொல்கிறேன் கரடுமுரடான மேற்பரப்பு பந்து நகர்ந்தது. மதியம் பேட் மீது சறுக்கவில்லை. அந்த நிகழ்வு ஷ்ரேயாஸ் ஐயரை அவுட் ஆக்கியது. ரிவர்ஸ் ஸ்விங் கேஎல் ராகுலுக்கு கடினத்தை கொடுத்து ஆட்டமிழக்க செய்தது.

ஒரு நல்ல பேட்டிங் பிட்ச் இருந்தால் இந்தியா 300 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும், எனவே ஒரு சிறந்த போட்டியைக் கண்டிருப்போம். அப்படி இருட்னஹா தனித்துவமான மேற்பரப்பு டாஸ் திடீரென்று ஒரு கேம் சேஞ்சராக மாறியது, மேலும் ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை உருவாக்கியது.

இந்த போட்டியில் மிகப்பெரிய தருணம் என்று பார்த்தல் டிராவிஸ் ஹெட் பின்னோக்கி சென்று ரோஹித் சர்மா கேட்சை எடுத்தது தான். இது சிறந்த விளையாட்டுத் திறன் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் கொண்டிருக்கும் சாம்பியன் டிஎன்ஏ போல போன்றது. அந்த விஷயமானது சுமார் 100,000 மக்கள் முன்னிலையில் நடந்தது.
எளிமையாகச் சொல்வதானால் 10/10 சதவிகிதம் சொல்லவேண்டும் என்றால் இந்தியா முதலில் சூழ்நிலைகளால் தோற்கடிக்கப்பட்டது. இந்திய அணி இப்போதும் கூட 50 ஓவர் போட்டிகளில் சிறந்த தான். என்ன மக்களுக்கு காட்ட உலக கோப்பை மட்டும் தான் இல்லை என்று கூறினார் சஞ்சய் மஞ்சுரேகர்.



