சமீபத்தில் நடைபெற்ற முடிந்த உலக கோப்பை 2023 இந்திய அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில்இந்திய அணி தோல்வி தழுவியது. இந்திய இந்த உலகக் கோப்பை முழுவதும் பலம் வாய்ந்த அணியாக விளையாடியது லீக் போட்டிகள் மற்றும் அரை இறுதிப்போட்டி என அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டி வரை சென்றது. ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி எதிர்பார்க்காத விதமாக ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியைத் தழுவியது.

இந்தியாவால் இறுதிப் போட்டியில் மொத்தம் 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. விராட் கோலி, கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் ஷர்மாவின் அணிக்கு நல்ல தொடக்கத்தை அளித்து இருந்தபோதிலும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஒரு வலிமையான சக்தியாக நிரூபிக்கப்பட்டனர். இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் அதிரடியாக 137 ரன்களை குவித்து இந்தியாவிடம் இருந்து ஆட்டத்தை திசை திருப்பினார்
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான இறுதிப் போட்டியில் வீழ்த்தியது கள நடுவர் தான் என்று முன்னால் இங்கிலாந்து வீரரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து கூறியுள்ளார். உலகக் கோப்பை இறுதி போட்டி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 241 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருந்தது. அந்தப் போட்டியில் ட்ராவிஸ் ஹெட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை இறுதிப் போட்டியில் வீழ்தியது.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறுகையில் இறுதிப் போட்டியின் அழுத்தமும் இந்தியாவின் தோல்வியில் பங்கு வகிக்குமா, “நான் கடினமான காரணம், மெதுவான ஆடுகளம் மற்றும் கேஎல் ராகுல் மற்றும் பிறருக்கு வீரர்களுக்கு எவ்வளவு கடினமாக இருந்தது என்பதில் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். அவர்கள் பையில் விக்கெட் எதுவும் மீதம் இல்லாததால், முன்னேற வேண்டும். இந்த ஆட்டம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான லீக் போட்டி என்று கற்பனை செய்து பாருங்கள்; இந்தியா அந்த அபாயத்தை எடுத்திருக்குமா? ஒருவேளை ஆம், அங்குதான் மனோபாவம் வருகிறது, ஒருவேளை அது ஒரு லீக் போட்டியாக இருந்தால், இந்தியா வித்தியாசமாக விளையாடியிருக்கும்.” என்று அவர் கூறி இருந்தார்.




