இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் T20 மற்றும் ODI போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணிய டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. இன்றைய போட்டி முந்தைய போட்டிக்கு முழுவதும் மாறுபட்டு இருந்தது. அந்த போட்டியானது மூன்று நாட்களிலே முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக தோல்வியை தழுவியது.

தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் இன்னிங்க்ஸில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்னில் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அதிக பட்சமாக வெர்ரின்னே 15 ரன்களும் பெடிகம் 12 ரன்னிலும் ரபாடா 5 ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணியை சுருட்டி இருந்தனர். அதன் பின் முதல் மீண்டும் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 153 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதில் 7 இந்திய வீரர்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை.
இந்திய அணியின் அதிகபட்சமாக கோலி 46 ரன்களிலும் ரோஹித் 39 ரன்களும் கில் 36 ரன்களும் அடித்து இருந்தனர். அதே நாளில் 2வது இன்னிங்க்சில் மீண்டும் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நேற்றைய நாள் முடிவில் 62-3 என்ற நிலையில் இருந்தது. இன்றைய நாள் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் அதிகம் தான் அதிகம் இருந்து. இதில் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக மார்கரம் 106 ரன்னிலும் ஜான்சன் 11 ரன்னிலும் பெடிகம் 11 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். 79 ரன்கள் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலையில் இருந்த நிலையில் அதன் பின் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன்படுத்தி இருந்தது. போட்டி குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறுகையில்,
டெஸ்ட் போட்டியில் குறிப்பிட்ட தருணங்களில் தவறவிட்டால் தோல்வியை தான் தழுவ முடியும். ரோகித் சர்மா முதல் டெஸ்ட் தொடரில் அந்த தவறுகளை செய்து இருந்தார் முதல் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் இரண்டாவது போட்டியில் சிராஜ் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்சில் மார்க்கம் சதம் அடித்திருந்தபோது சிராஜ் ஒரே ஒரு ஓவரை மட்டுமே வீசியிருந்தார். அந்த சமயத்தில் அவரை அதிகமாக பயன்படுத்தியிருக்கலாம்.

அவ்வாறு பயன்படுத்தியிருந்தால் தென் ஆப்பிரிக்கா அணி 62 ரன்கள் முன்னிலையில் இருந்து இருக்காது. ரோகித் ஒரு பழைய பள்ளியில் டெஸ்ட் பேட்ஸ்மாகத்தான் இருக்கிறார் அவர் இன்னும் எத்தனை காலம் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும். இன்னொரு பக்கம் விராட் கோலி டெஸ்டில் அதிகமான போட்டிகளை அவர்கள் அடி உள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் கடினமான நிலையில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்




