உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 அன்று முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 24வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஜெய்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வந்தது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். 20வது ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்களை அடித்து இருந்தனர்.

ஆரம்பத்தில் ஜெய்ஸ்வால் 24 ரன்களிலும் பட்லர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினாலும் அதன் பின் சஞ்சு சாம்சனுடன் இணைந்து ரியான் பாராக் அதிரடியை காட்ட தொடங்கினார். ரியான் பராக் 48 பந்துகளில் 76 ரன்களையும் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 68 ரன்களையும் அடித்து இருந்தனர். போட்டியின் இடையில் 180ரன்களே வருமா என்ற கேள்வி இருந்தது. ஆனால் அதன் பின் வந்த ஹெட்மெயிர் 5 பந்துகளில் 13 ரன்களை அவர் அடித்து இருந்தார் . எனவே தான் ராஜஸ்தான் அணி 196 ரன்களை அடித்து குவித்து இருந்தது.
197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்ததது. ஒரு பக்கம் கேப்டன் கில் மட்டும் தனியாக நின்று போராடி இருந்தார். இருப்பினும் அவராலும் போட்டியை இறுதி வரை எடுத்து செல்ல முடியவில்லை. அவர் 44 பந்துகளில் 72 ரன்களை அடித்து இருந்தார். அவரை தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. அதற்க்கு அடுத்த படியாக சாய் சுதர்ஷன் 29 பந்துகளில் 35 ரன்களை மட்டுமே அவர் அடித்து இருந்தார்.கடைசி 1 பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராஷித் கான் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்பந்தை பவுண்டரிக்கு அடித்து அணியை வெற்றி பெறவைத்தார்.

போட்டியின் இடையில் போட்டியை ராஜஸ்தான் அணி தான் போட்டியை கைப்பற்றியது என்று நினைத்து கொண்டு இருந்த நிலையில் இந்த இருவரின் பார்ட்னர்ஷிப் தான் அணியை வெற்றி பெற வைத்தது. திவாட்டியா 22 ரன்களும் ராஷித் கான் 24* ரன்களையும் அடித்து குஜரத் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். சஞ்சு சாம்சன் கேப்டன்சி குறித்து சில கேள்விகள் எழுந்துள்ளது. அது என்ன என்று பார்த்தல் போல்ட் இரண்டு ஓவர்களை சிறப்பாகவீசி 8 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து இருந்தார். இருப்பினும் அவருக்கு சஞ்சு சாம்சன் சரியான வாய்ப்புகளை அவர் வழங்கவில்லை.
இது குறித்து டாம் மூடி கூறுகையில், இறுதியில் நீங்கள் டிரென்ட் போல்ட்டைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அவர் டெத் ஓவர்களில் பந்து வீசி சிறப்பான அபார அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். அதனால் அழுத்தம் என்று வரும்போது, அவர் அதை உள்வாங்கி அந்தச் சவால்களை எதிர்கொள்ளப் பழகிவிட்டார்.சஞ்சு சாம்சன் அதிலிருந்து விலகிவிட்டார். அவருக்கு இரண்டு ஓவர்கள் எஞ்சியிருக்கும் நிலையில் அவருக்கு ஓவரை நிறுத்தியது எந்த அர்த்தமும் இல்லை. நீங்கள் அங்குள்ள பந்துவீச்சைப் பார்த்தால்,போல்ட் அங்கு மிகவும் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்.

அது அவருடைய பலமா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், நீங்கள் இன்னும் அவரை ஆதரிக்க வேண்டும். 15வது மற்றும் 17வது உண்மையில் இறுதி ஓவர்கள் அல்ல. மிடில் ஓவர்களின் முடிவைப் போல, அவருக்கு இரண்டு ஓவர்கள் கிடைத்திருந்தால், நீங்கள் அவரைப் பந்துவீச வேண்டும். அஷ்வினுக்கு எதிராக இது ஒன்றும் இல்லை. அவர் ஒரு தரமான பந்துவீச்சாளர். ஆனால் அவரும் சாஹலும் சேர்ந்து அவர்களது 8 ஓவர்களில் 83 ரன்கள் எடுத்தனர், இது மிகவும் கனமானது. ட்ரென்ட் போல்ட்டை தவறவிட்டது தோல்விக்கு காரணம் என நான் நினைக்கிறேன்.என்று அவர் கூறினார்




