உலக கோப்பை தொடரானது சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த போட்டியில் இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் 2வது போட்டியில் ஆப்கானிஸ்தானை எளிதாக தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தானை முன்னேறி 2வது இடத்திற்கு முன்னேறியது. இந்த போட்டியை தொடர்ந்து நாளை நரேந்திர மோடி மைதானத்தில் வரும் 14ஆம் தேதி இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

அந்த போட்டியிலும் இந்தியா வெல்லும் என்ற பட்சத்தில் கடந்த 1992ஆம் ஆண்டில் இருந்து இதுவரை உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானிடம் தோற்காமல் இருந்து வரும் இந்தியாவின் கௌரவத்தை தற்போது உள்ள இந்திய அணி காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணியானது கடைசியாக சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 2011 உலகக்கோப்பையில் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது சிம்ம சொப்பனமாக நின்ற சச்சின் டெண்டுல்கர் 85 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். சொல்லப்போனால் முன்னதாகவே சச்சின் கொடுத்த சில கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்ட பாகிஸ்தான் கடைசியில் அப்போட்டியில் போராடி தோல்வியை சந்தித்தது.

இந்த போட்டியின் போது சயீத் அஜ்மல் சுழலில் அவுட்டாகிய சச்சின் சேவாக் பக்கத்தில் வந்த அமர்ந்திருக்கிறார். அப்போது சேவாக்கும் புன்னகைத்திருக்கிறார். இந்நிலையில் சேவாக்கை பார்த்து சச்சின் “அந்த சமயத்தில் நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் என சச்சின் கூறியிருக்கிறார். அதற்கு சேவாக் கூறுகையில் ஏன் என்று அவரிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு பதிலளித்த சச்சின் கூறுகையில் “அப்போது நான் சதமடிப்பதற்கு முன்பாகவே அவுட்டாகி விட்டேன் ஒருவேளை நான் சதமடித்திருந்தால் நாம் தோல்வியை சந்தித்திருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என சச்சின் கூறியுள்ளார். அதற்கு சேவாக் தான் மனதில் நினைத்ததை நீங்கள் எப்படி படித்தீர்கள் என்றும் நீங்கள் சதமடித்த தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக போட்டிகளில் ஒன்றில் இந்தியா தோற்றது மற்றொன்று சமனில் முடிந்தது என்றும் கூறியுள்ளார் சேவாக்

மேலும் நல்லவேளையாக அவர் அப்போட்டியில் சதமடிக்கவில்லை என்றும் நாங்களும் உலகக்கோப்பை வென்றோம். அதற்கு கடவுளுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார் சேவாக் இந்நிலையில் அவர் அப்படி கூறியதற்கு காரணம் சச்சின் சதமடித்த பல போட்டிகளில் இந்தியா தோல்வியையே சந்தித்திருக்கிறார். இதனால் தான் ஒருவேளை சச்சின் அப்படி சொல்லியிருக்கலாம்.



