உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்ய அது சரியான முடிவாக சென்றது. லக்னோ அணியின் துவக்க பேட்ஸ்மேன்கள் முதல் இரண்டு ஓவர்களில் கொஞ்சம் நிதானமாக ஆடினாலும் 3வது ஓவரில் இருந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர்

இருந்த போதிலும் ராகுல் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பின்னர் வந்த பேட்ஸ்மேன்களும் நிலைக்காமல் ஆட்டமிழந்தார். டீ காக் மட்மே பொறுமையாக விளையாடி அரை சதம் அடித்த போதிலும் அவரும் ஆட்டமிழக்க அதிரடியாக விளையாடிய பூராண் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த குணால் பாண்டியா அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்த இறுதியில் லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை அடித்தது.
பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கம் இருந்தாலும் பின்னர் சொதப்பிய காரணத்தினால் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இவர்களின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தவர் மயங்க் யாதவ். இவரின் வேகம் மணிக்கு 150 கிலோ மீட்டருக்கு மேலே இருந்த காரணத்தினால் இவரின் மீது பலரின் பார்வையும் பட்டது. மேலும் இந்தியாவின் எதிர்கால வேகப்பந்து வீச்சாளராக வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக பல கிரிக்கெட் வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.

ஆஹா மயங்க் யாதவ் போல ஒருவரைத் தான் ஒவ்வொரு அணியும் கண்டறிய விரும்புகிறது. மயங்க் வேகத்தில் பந்துவீசி உலகத் தரம் வாய்ந்த பேட்டர்களை அவர் குதிக்கச் செய்கிறார். ஜானி பேர்ஸ்டோ ஒன்று அல்லது இரண்டு பந்துகளை எதிர்கொண்ட பிறகு, அவர் உண்மையில் வேகமான பந்துகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கிரீஸில் நகர்ந்து விளையாட ஆரம்பித்து விட்டார். மயங்க் பந்துவீசுவது இடி போல இருந்தது என்றார் வாட்சன்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “LSG அணியில் இருந்து இது ஒரு நல்ல ஆல்-ரவுண்ட் செயல்திறன். குயின்டன் டி காக் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் போட்டியின் முதல் பந்திலேயே எப்படி விளையாட வேண்டும் என்று இருந்த நோக்கத்தை நீங்கள் பார்க்க முடியும். கே.எல். ராகுல் வெறும் 15 ரன்களுக்கு அவுட்டாகியிருக்கலாம் அது 8 பந்துகளில். அதுதான் நான் பார்க்க விரும்பும் ஒன்று.
கேஎல்ராகுல் தற்போது ஆரஞ்சு தொப்பிக்கு அருகில் இல்லாததால் அவர் ஏமாற்றம் அடைந்திருக்கலாம், ஆனால் அவரது குழு செய்ய வேண்டியது இதுதான். அதனை நிக்கோலஸ் பூரனுடன் தொடர்ந்து பின்பற்றினர். பின்னர் அவற்றைப் பெற்ற க்ருனால் பாண்டியாவுடன் 199 ரன்கள் வரையில் அப்படியே விளையாடி முடித்தனர் என்றார் வாட்சன்.




