ரஞ்சி ட்ராபியில் தமிழக அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து 109 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறிய பிறகு BCCI வீரர்களுக்கு அளிக்கும் நெருக்கடி குறித்து வெளிப்படையாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், இன்னும் இரண்டு சீசன்களுக்கு வீரர்கள் இப்படி விளையாடினால், நாடு முழுவதும் காயமடைந்த வீரர்கள் அதிக அளவில் தான் இருப்பார்கள். நாங்கள் மூன்று நாள் இடைவெளியுடன் முதல் தர போட்டிகளில் விளையாடுவதால் இது கடினம்.

அது எப்போதும் நடக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் விளையாடத் தொடங்கியபோது, முதல் மூன்று ஆட்டங்களுக்கு மூன்று நாள் இடைவெளி, நான்கு நாள் இடைவெளி, பிறகு நாக் அவுட்களுக்கு ஐந்து நாள் இடைவேளை. இப்போது அனைத்து போட்டிகளும் மூன்று நாட்கள் இடைவெளியில் விளையாடப்படுவதை நாங்கள் பார்த்துள்ளோம், எனவே அணி இறுதிப் போட்டிக்கு வந்தால், மூன்று நாள் இடைவெளியுடன் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்ப்பது உள்நாட்டு வீரர்களுக்கு மிகவும் கடினமானது.

அடுத்த ஆண்டு அவர்கள் அதை மறுபரிசீலனை செய்து அதிக இடைவெளிகளை (ரஞ்சி டிராபி போட்டிகளுக்கு இடையில்) கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அட்டவணை மேலும் இறுக்கமாகி வருகிறது. இன்னும் இரண்டு சீசன்களுக்கு வீரர்களுக்கு இப்படி விளையாடினால், முழுவதும் காயங்கள் நிறைய இருக்கும். நாடு” என்று ஷர்துல் தாக்கூர் கூறினார். சில நாட்களாக இணையத்தில் பகிரப்பட்டு வரும் செய்தி என்றால் அது இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர்கள் சம்பளம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது தான்.

பிசிசிஐ நேற்று மத்திய ஒப்பந்தம் 2023 மற்றும் 2024 காண பெயர்களை வெளியிட்டது. அதில் சில முக்கிய வீரர்களின் பெயர்களை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நிக்கியது தான். அதில் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர்கள் தான் மிகவும் பேசப்பட்டு வந்தாலும் அதற்கு அடுத்தபடியாக சாஹல் புஜாரா ஷிகர் தவான் உமேஷ் யாதவ் ஆகியோரின் பெயர்களும் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.இஷான் கிஷான் தென் ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடரின் போது மன சோர்வு காரணமாக அணியிலிருந்து விலகினார். ஆனால் அதன் பின்னர் அவர் ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடாமல் ஐபிஎல் 2024 பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





