மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றா வென்ற ஒருநாள் போட்டிகளானது தொடங்கியது. அதில் முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்தியா வெற்றிபெற்றாலும், 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை தழுவிய நிலையில் 3வது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு மிக முக்கியமான ஒரு காரணமாக இருந்தவர் ஷர்துல் தாகூர். இவர் முதல் போட்டியில் பெரிதாக விக்கெட்டுகள் எடுக்கவில்லை என்றாலும் அதற்கு அடித்த 2 வது போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இருந்த போதிலும் இந்தியா தோல்வியை தழுவியது. மேலும் கடைசியாக நடந்த 3வது ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாகூர் 6.3 ஓவர்கள் வீசி 37 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் இதற்கு பிறகு ஒரு பேட்டியில் பேசிய ஷரத்ல் தாகூர் கூறுகையில் ” இந்த தொடரில் நான் 8 விக்கெட்டுகளை எடுத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். வாய்ப்புக்காக வருட கணக்கில் காத்திருக்கும் என்னைப் போன்ற வீரர்களின் சில நேரங்களில்ஸ் சிறப்பாக விளையாட முடியும். சில நேரங்களில் முடியாது. இருப்பினும் எந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தாலும் அது எனக்கு பெரிய தன்னம்பிக்கையை கொடுக்கிறது. ஏனெனில் நான் என்னுடைய கேரியரில் அனுபவத்தை மட்டுமே சேர்த்து வருகிறேன்

நான் ஒருவேளை 2023 உலகக்கோப்பையில் தேர்வு செய்யப்படாமல் போனால் அது இந்திய அணியின் முடிவாகும். அதற்காக நான் எதுவும் செய்ய முடியாது. எனவே நான் எப்போதுமே போட்டியின் சூழ்நிலைக்கேற்றவாறு அணிக்காக சிறப்பாக செயல்பட முயற்சித்து வருகிறேன். மேலும் இந்த வருடம் நான் ஒரு ஒருநாள் தொடரில் விளையாடவில்லை என்று நினைக்கிறேன். அதாவது சொந்த மண்ணில் ஜனவரியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை.
அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அதை தவிர்த்து கடந்து 2 வருடங்களில் நடைபெற்ற பெரும்பாலான ஒருநாள் தொடர்களில் நான் விளையாடியுள்ளேன். குறிப்பாக அணி நிர்வாகம் என்னிடம் ஏதோ எதிர்பார்க்கிறது என்பதாலேயே தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வருகிறேன். எனவே விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அணி நிர்வாகம் என் மீது ஏதோ தன்னம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுப்பதாக உணர்கிறேன்.

கடந்த சில வருடங்களில் நாம் ஆழமான பேட்டிங் வரிசையுடன் விளையாடி வருகிறோம். அதனால் எனக்கான வேலை முக்கியத்துவம் பெறுகிறது. எனவே வாய்ப்பு கிடைத்தால் பேட்டிங், பவுலிங் அல்லது ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் அணிக்காக பாடுபட தயாராக இருக்கிறேன். அதனால் போட்டியின் முடிவில் எந்த துறையாக இருந்தாலும் என்னுடைய செயல்பாடுகள் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தினால் அதுவே எனக்கு மகிழ்ச்சியாகும்” என்று கூறினார்.




