
ipl2024க்கான ஏலமானது துபாயில் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வீரர்களை போட்டி போட்டு வங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டார்கை அதிக விலையான 24.75 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை வாங்கியிருந்தது. அதற்க்கு அடுத்தபடியாக ஹைதராபாத் அணி 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது. இவர் சர்வதேச போட்டிகளில் 2 கோப்பைகளையும் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் கேப்டனாக அணியை வழிநடத்தி கோப்பையை வென்று இருந்தார்.

இது போன்ற வெளிநாட்டு வீரர்களை ஐபிஎல் அணிகள் அதிக விலைக்கு எடுத்தது இந்திய ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அதற்க்கான காரணம் என்னவென்று பார்த்தால் இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியிருந்தது. இதில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் மீண்டும் சென்னை அணியில் இணைந்தார். அவரை சென்னை அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து இருந்தது.
சென்னை அணி அவரை ஏலம் எடுத்தது குறித்து ஷர்துல் தாக்கூர் அவரது உணர்சிகரமான சில விஷயங்களை கூறி இருந்தார்.இவர் சென்னை அணியில் 2018ஆம் ஆண்டு முதல் 2021 வரை சென்னை அணியில் விளையாடி இருந்தார். அதன் பின் ஒரு வருடம் டெல்லி அணியில் அவர் விளையாடி இருந்தார். ஷர்துல் தாக்கூர் சென்னை அணிக்கு முக்கியமான வீரராக இருந்து வந்தார். அவர் விளையாடிய போட்டிகளில் பந்துவீச்சில் அதிகமான ரன்களை கொடுத்து இருந்தாலும் முக்கியமான நேரங்களில் சில விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருப்பார். அதே போல் அவர் அணிக்கு தேவையான நேரங்களில் ரன்களையும் அடித்து அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.
சென்னை அணி ரசிகர்களால் மறக்க முடியாத தருணம் என்னவென்றால் 2019 ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அணி மும்பை அணியிடம் 1 ரன்னில் தோல்வியை தழுவியது. அதில் இறுதி ஓவரை மும்பை அணியின் மல்லிங்கா வீசி இருந்தார். கடைசி 1 பந்தில் 2 ரன் எடுத்து இருந்தால் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கும். ஆனால் துர்ததிர்ஷ்டமாக சென்னை அணியால் அதை எடுக்க முடியவில்லை எனவே 1 ரன்னில் தோல்வியை தழுவியது.
அப்போது பேட்டிங்கில் ஷர்துல் தாக்கூர் விளையாடி இருந்தார். அவர் அந்த கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது அவர் சென்னை அணியில் இணைந்தது குறித்து மனமுருகி சில விஷயங்ககளை கூறி இருந்தார். அப்போது அவர் கூறுகையில், 2019ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு தோல்விக்கு பின், சென்னை அணி என் மீது கூடுதலாக நம்பிக்கை வைத்து. அந்த நம்பிக்கைக்கு எனக்கு அதிக போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கியது.
சென்னை அணி கோப்பையை வென்ற 2018 மற்றும் 2021 ஆகிய சீசன்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சென்னை அணியின் வீரர் நான் தான். இம்முறையும் அதேபோல் மிகச்சிறந்த முறையில் பந்துவீசுவேன் என்று நான் நம்புகிறேன். மீண்டும் சென்னை அணியின் ரசிகர்களையும், அன்பையும் பெற காத்திருக்கிறேன். சேப்பாக்கம் மைதானத்தில் தோனிக்கு ரசிகர்களின் அளிக்கும் வரவேற்பை போல் வேறு எந்த அணி வீரருக்கும் நான் வரவேற்பளித்து பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.





