இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான கட்டுப்பாட்டு வாரியம் BCCI ஜூலை 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை, சீனாவின் ஹாங்க்சோவில் நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பல காலம் கழித்து விளையாடுகிறது. 2023 க்கான ஆசிய விளையாட்டு போட்டிகளானது வரும் செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி முதல் ஆக்டோபர் 8ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய தன்னுடைய டி20 அணியை நேற்று அதிகார பூர்வமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இந்த அணியில் ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ராகுல் திரிபாதி, ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், சிவம் மவி, சிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்)ஆகியோர் உள்ளனர். இப்படிப்பட்ட நிலையில் பல ஆண்டுகாலம் இந்திய அணியில் இருந்து ஷிகர் தவாணை கேப்டனாக மட்டுமல்லாமல் அணியில் ஒரு வீரராக கூட எடுக்கவில்லை.

இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஷிகர் தவான் இல்லாமல் இந்திய அணியில் எப்படி சமாளிக்கும் என்றும் பலர் கேள்விகளையும் எழுப்பி வரும் நிலையில் தான் ஷிகர் தவான் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் தான் அணியில் இடம்பெறாதது குறித்தும், அடுத்து என்ன திட்டம் இருக்கிறது என்பது குறித்தும் பேசியுள்ளார் ஷிகர் தவான்.
ஷிகர் தவான் சொன்னது :
அவர் கூறியதாவது “ஆசிய போட்டியில் விளையாடும் இந்திய அணியில் என்னுடைய பெயர் இல்லாத போது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பின்னர் எனக்கு தெரிந்தது தேர்வாளர்கள் புதிதாக எதோ வித்தியாசமாக செய்கின்றனர் என்று, எனவே அதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் ஆக வேண்டும். ருதுராஜ் கெய்க்குவாட் தலைமை தங்குவதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அணைத்து இளம் வீரர்களும் அணியில் இருக்கின்றனர். எனக்கு நம்பிக்கை இருக்கிறது அவர்களினால் சிறப்பாக செயல்பட முடியும் என்று.

நான் எந்த மாதிரியான சூழ்நிலைக்கும் தயாராக இருக்கிறேன். என்னால் கண்டிப்பாக மீண்டும் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும் என்ற நம்மிக்கை இருப்பதினால் நான் இன்னமும் உழைத்து வருகிறேன். எப்போதுமே இந்தியா அணியில் இடம்பெற 1 அல்லது 20 சதவிகிதம் வாய்ப்பாவது இருக்கும். இன்னமும் என்னுடைய பயிற்சியையும், கிரிக்கெட்டையும் எஞ்ஜாய் செய்துதான் விளையாடுகிறேன். சில விஷயங்களில் என்னுடைய கட்டுப்பாட்டிற்குள் தான் இருக்கிறது. அவர்கள் எந்த விதமான முடிவு எடுத்தாலும் அதனை நான் மதிக்கிறேன்.
நான் என்னுடைய எதிர்காலம் குறித்தும் எந்த விஷயங்களையும் தேர்வாளர்களிடம் பேசவில்லை. நான் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள அகெடமிக்கு சென்று வருகிறேன். அங்கு இருக்கும் நேரத்தை நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அங்கு வசதிகளும் சிறப்பாக இருக்கிறது. NCA என்னுடைய கிரிக்கெட்டில் நல்ல நிலைக்கு கொண்டுவந்ததில் பெரிய பங்கு இருக்கிறது. அதற்காக நான் எப்போதுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்றார் ஷிகர் தவான்.




