உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த உலகக்கோப்பை 2023 தற்போது இந்தியாவில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி போட்டியுடன் முடிவடைகிறது. நேற்று உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடியது . இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்திலும் வெற்றி பெற்று பலம் வாய்ந்த அணியாக நேற்று ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது.

ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை தழுவி இருந்தாலும் அதன் பின் நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றியை பதித்து நேற்று இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பௌலிங் செய்வதாக தேர்வு செய்தார்.
இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி விளையாடியது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்களை மட்டுமே குவித்து இருந்தது. இந்திய அணியின் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ரன்களும் விராட் கோலி 54 ரன்களுக்கும் ரோஹித் ஷர்மா 47 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணியின் பேட்டிங் சுமாராகவே இருந்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் இது போன்று சொதப்பியது இந்திய ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை.

241 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆரம்பத்தில் சிறிய தடுமாற்றம் இருந்தாலும் அதன் பின் ட்ராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி இந்திய அணியை எளிதாக இறுதிப் போட்டியில் வென்றனர். ஆஸ்திரேலியா அணி 43 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 241 ரன்களை குவித்து வெற்றி பெற்றனர்.எனவே ஆஸ்திரேலியா அணி 6 முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றி பலம் வாய்ந்த அணியாக இருக்கின்றது. இந்திய அணி லீக் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ளார் சோயிப் அக்தர். அவர் கூறுகையில் “இந்தியா ஒரு சிறந்த விக்கெட்டைத் தயார் செய்திருக்க வேண்டும் மற்றும் விக்கெட் தொடர்பாக பயமுறுத்தும் அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும். ஆடுகளத்திற்கு பவுன்ஸ் மற்றும் வேகம் கிடைத்திருக்க வேண்டும். தங்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நினைத்து மெதுவான ஆடுகளத்தை தயார் செய்தனர். அந்த அணுகுமுறை எனக்குப் பிடிக்கவில்லை.

மேலும் பேசிய கூறுகையில் இந்தியாவின் திறன் குறித்தும் பேசினார். அவர் கூறுகையில் “அவுஸ்திரேலியா உலகக் கோப்பைகளை தொடர்ந்து வெல்வதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது. இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி அதிர்ஷ்டத்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. அவர்கள் 10 ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு வந்தனர் என்று கூறியுள்ளார் சோயிப் அக்தர்.



