இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். அதில் முதல் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி முதலில் இருந்து வருகிறது. இன்று நாலாவது போட்டியானது ராஞ்சியில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது. அது ஆரம்பத்தில் அவர்களுக்கு சொதப்பலாக இருந்தாலும் அதன் பின் சிறப்பாக விளையாடி இருந்தனர்.

நேற்று இதில் முதல் செஷனில் இந்திய அணியின் கைகள் ஓங்கி இருந்த நிலையில் உணவு இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் வீரர் ரூட் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு சவாலாக இருந்தார். இந்திய அணியின் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது திறமையை நிரூபித்து இருந்தார். அதிக பட்சமாக ஜோ ரூட் 123 ரன்களில் ஆட்டமிழக்காமலும் பென் போக்ஸ் அரை சதத்தை தவறவிட்டு 47 ரன்னிலும் க்ராலி 42 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
எனவே இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களை அடித்து இருந்தது. மேலும் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாகவே செயல் பட்டு இருந்தனர். ஜடேஜா 4 விக்கெட்டையும் இதில் குறிப்பாக அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ்2 விக்கெட்டுகளையும் அஷ்வின் 83 ரன்களை விட்டுகொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர். அதன் பின் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் 2 ரன்னில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

சுப்மன் கில் 38 ரன்களிலும் ரஜத் படிதார் 17 ரன்களிலும் ரவீந்திர ஜடேஜா 12 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். மற்று ஒரு பக்கம் நின்று நிதானமாக விளையாடிய ஜெய்ஸ்வால் தனது அரை சதத்தை பூர்த்தி செய்து இருந்தார். அதன் மூலம் அவர் இந்திய அணிக்காக ஒரேதொடரில் 600 ரன்களை கடந்த இடது கை பேட்ஸ்மேன் என்ற சாதனையும் அவர் படைத்து இருந்தார். மேலும் இந்திய அணிக்காக ஒரு தொடரில் 600 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் 3 இடத்தில் இருந்து வருகிறார். ஜெய்ஸ்வால் 73 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. அதில் ஜெய்ஸ்வால் மட்டுமே அரை சதத்தை பதிவு செய்து இருந்தார். தற்போது ஜுரேல் 30 ரன்களிலும் குல்தீப் யாதவ் 17 ரன்களிலும் விக்கெட்டை இழக்காமல் விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணியின் சார்பாக பஷீர் நான்கு விக்கெட்டுகளையும் ஹார்ட்லி இரண்டு விக்கெட் களையும் ஆண்டர்சன் ஒரு விக்கட்டையும் வீழ்த்தி இருந்தார்.
இன்றைய ஒரு நாளில் மட்டும் இங்கிலாந்து அணியின் இளம் பந்துவீச்சாளர் 32 ஓவர்களை வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இந்திய அணி அவரது பந்து சற்று சுமாராகத்தான் விளையாடி வருகிறது. எனவே இன்றைய நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை 219 ரன்களை மட்டுமே அடித்து இருக்கின்றது





