
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 5போட்டிகளைக் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் முதல் நான்கு போட்டிகளில் இந்தியா அணி மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த இன்று ஐந்தாவது போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். உலககோப்பைக்கு பிறகு ஷ்ரேயஸ் ஐயர் இந்திய அணியில் இணைந்துள்ளார். இன்றைய போட்டியில் தீபக் சஹார் சில மருத்துவ காரணங்களுக்காக அணியிலிருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் இந்த போட்டியில் விளையாடினார். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் வேட் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தடுமாறியே விளையாடி வந்தது. ஆரம்பத்திலிருந்து இந்திய அணியால் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் திணறியே வந்தனர். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். எனவே இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் சிறப்பாக செயல்படவில்லை. ஜெய்ஸ்வால் 21 ரன்களிலும் ருதுராஜ் 10 ரன்னிலும் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பின் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தாலும் மறுபக்கத்தில் ஷ்ரேயஸ் ஐயர் நின்று அணிக்கு நல்ல இலக்கை அளித்தனர். இந்திய அணியின் அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 53 ரன்களும் அக்சர் பட்டேல் 31 ரன்களும் ஜிதேஷ் ஷர்மா 24 ரன்களையும் மட்டுமே அடித்து இருந்தனர்.

கேப்டன் சூரியகுமார் யாதவ் 5 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆஸ்திரேலியா அணியின் சார்பில் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் துவர்ஷுயிஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஆரோன் ஹார்டி,நாதன் எல்லிஸ் மற்றும் டி சங்கா தலா ஒரு விக்கெட்டையும் விழித்திருந்தனர் எனவே இந்திய அணி 20 அவர்கள் முடிவில் 160 ரன்களை மட்டுமே அளிக்க முடிந்தது. தற்போது ஆஸ்திரேலியா அணி 55-3 என விளையாடி வருகிறது.





