அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியானது ஏற்கனவே ஆசிய கோப்பை 2023 தொடரில் இறுதி போட்டிக்கு சென்ற நிலையில் இன்று ஏற்கனவே ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இருந்து வெளியேறிய பங்களாதேஷ் அணியுடன் இந்திய அணியானது இன்று மோதுகிறது. மேலும் ஆசிய கோப்பை 2023 தொடரில் ஏற்கனவே இந்தியா இறுதி போட்டிக்கு சென்று விட்டதினால் இந்த போட்டியில் தோல்வியடைந்தாலும் வென்றி பெற்றாலும் எந்த விதமான பாதிப்பும் இந்தியாவுக்கு ஏற்படாது.
இதனால் இந்திய அணியின் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய பங்களாதேஷ் அணியின் வீரர்கள் தொடக்கத்திலேயே தடுமாறினார்கள். ஆனாலும் பின்னர் சுதாரித்து கொண்ட பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷாகிப் பொறுமையாக விளையாடி 85 பந்துகளில் 80 ரன்களை விளாசினார்.

இவரோடு டவ்ஹித் ஹ்ரிடோய் 81 பந்துகளில் 54 ரன்களை விலாச பின்னர் பந்து பேட்ஸ்மேன்கள் தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்த பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களை விளாசியது. ஆனால் இதனையடுத்து விளையாடிய இந்திய அணியால் 49.5 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியயை தழுவியது.
சில நேரங்களில் நீங்கள் பேட்டிங் செய்யும்போது அட்ரினலின் அளவு அதிகமாக இருக்கும், நீங்கள் தவறாகக் கணக்கிடுகிறீர்கள். அது என் தரப்பில் தவறாகக் கணக்கிடப்பட்டது. ஆனால் நான் அவுட் ஆனதும், நிறைய நேரம் மீதம் இருந்தது, நான் அவ்வளவு ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யாமல் இருந்திருந்தால், நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும். இது நிச்சயமாக நாங்கள் மேம்படுத்த முயற்சிக்கும் ஒரு பகுதி.

இலங்கை வருவதற்கு முன்பு நாங்கள் பெங்களூரில் ஒரு முகாமை வைத்திருந்தோம், அதேபோன்ற விக்கெட்டுகளில் நாங்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தோம். உலகக் கோப்பை ஒரு நீண்ட போட்டி; நாங்கள் ஆழமாகச் செல்லும்போது. போட்டியின் விக்கெட் மெதுவாக இருக்கும். ஸ்டிரைக்கை சுழற்றுவதும் அந்த டாட் பால்களை குறைப்பதும் வரும் பேட்ஸ்மேன்களுக்கு எளிதானது அல்ல.

ஒரு பேட்டிங் யூனிட்டாக, நாங்கள் அதில் வேலை பார்க்கிறோம். அனைத்து பந்துவீச்சாளர்களுக்கும் நாங்கள் ஓய்வு கொடுத்ததற்குக் காரணம், அவர்கள் பாகிஸ்தானுக்கும் பின்னர் இலங்கைக்கும் எதிராக மூன்று நாட்கள் தொடர்ந்து விளையாடியதால் தான். பந்துவீச்சாளர்களுக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது, இதனால் அவர்கள் இறுதிப் போட்டிக்கு மீண்டும் வருவார்கள் என்று கூறியுள்ளார் சுப்மன் கில்




