ஐபிஎல் 2023தொடரின் 51வது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்நிலையில் டாஸை வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் சிறப்பாக விளையாடியது.

அதிரடியாக ஆடிய விர்த்திமான் மிகவும் சிறப்பாக விளையாடினார் 20 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 81 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதே நேரத்தில் சுப்மன் கில் 51 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உதவியுடன் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார். இவர்கள் இருவரையும் தவிர ஹர்திக் 25 ரன்களும், மில்லர் ஆட்டமிழக்காமல் 21 ரன்களும் எடுத்தனர். இறுதியில் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 227 ரன்களை விளாசியது.
இந்நிலையில் 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய லக்னோ சிறப்பான தொடக்கத்தை பெற்றது. இருப்பினும் அரை சதத்தை தவறவிட்ட கைல் மேயர்ஸ் வடிவில் முதல் அடி லக்னோ அணிக்கு கிடைத்தது. அவர் 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இதையடுத்து குயின்டன் டி காக் அரைசதம் அடித்தார். முடிவில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

சுப்மன் கில் கூறியது :
இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய ஆதமயக்கன் சுப்மன் கில் பேசுகையில் “லக்னோ அணி பவர் பிளேவின் மிகவும் அவர் சிறப்பாக பேட்டிங் செயல்பட்டார்கள், ஆனால் அதன் பிறகு மோகித் ஷர்மா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லக்னோ போன்ற வலுவான அணியை 180 ரன்களுக்குள் நிறுத்துவது என்பது மிகவும் சிறந்தது. அந்த வகையில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். மேலும் நான் பரந்த கண்கள் கொண்ட சாஹாவுடன் நேரத்தில் நிறைய கிரிக்கெட் கற்றுக்கொள்கிறேன்.
— Ninja (@IPLcskMSD) May 8, 2023
அவருடன் பேட்டிங் செய்யும் போது நான் அவரிடம் நிறைய விஷயங்களைக் கேட்டு தெரிந்து கொண்டேன். ஏனென்றால் அவர் 16 ஆண்டுகளாக ஐபிஎல் முதல் சீசனில் விளையாடி வருகிறார். அப்படி பல ஆண்டுகளாக விளையாடி வரும் அனுபவமிக்க வீரருடன் விளையாடுவது உண்மையான மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னால் கடந்த சில போட்டிகளில் சிக்ஸர்களை அடிக்க முடியவில்லை. ஆனால் சில சிக்ஸர்களை அடித்தேன். மேலும் என்னுடைய விளையாட்டை மேலும் மேலும் மேம்படுத்துவேன் என்று கூறினார்.





