கிரிக்கெட்டில் நடத்தப்படும் ஒருநாள் போட்டி, டி20 போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என இப்படி ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக ரசிகர் பட்டாளங்கள் இருந்தாலும். அனைத்து ரசிகர்களும் விரும்பி பார்க்கும் கிரிக்கெட் தொடர் தான் இந்த ஐபிஎல் தொடர். ஏன் கிரிக்கெட்டை பார்க்காத மக்களுக்கு கூட விரும்பி பார்க்கும் அளவிற்கு இந்த ஐபிஎல் தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் இந்தியாவில் நடத்தப்படும் இந்த ஐபிஎல் தொடரை உலகெங்கும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் கூட விரும்பி பார்க்கும் வண்ணம் வருடம் வருடம் நடத்தப்பட்டு வருகின்றது.
ஐபிஎல் தொடர்
அதேபோல் இந்த வருடம் மார்ச் 31ஆம் தேதி
நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் இந்த தொடர் மிகவும் சுவாரஸ்யமாக செல்கிறது. ஏனென்றால் அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியிலும் பல அணிகளில் சிறந்த வீரர்கள் பலர் இடம்பெற்று இருப்பது ஒரு காரணம். இப்படி இந்த ஐபிஎல் தொடரில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள மிகப் பெரிய அணிகள் என்று பார்த்தால் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ். இதில் அதிக கோப்பைகளை கைப்பற்றி மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இடத்திலும் இரண்டாவதாக அதிக கோப்பைகளை கைபற்றி இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்
என்னதான் அதிக முறை ஐபிஎல் கோப்பையை வென்ற இரண்டாவது மிகப்பெரிய அணியாக இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் கூட ரசிகர்கள் உண்டு. அதற்கு காரணம் இந்த அணியின் கேப்டனாக இருக்கக்கூடிய மகேந்திர சிங் டோனி தான். இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மறக்க முடியாத போட்டியாக இருக்க போகிறது என்பதில் சந்தேகம் இல்லை. அதற்கு காரணம் இந்த இந்த ஐபிஎல் தொடரில் பல மாதங்களாக பரர்க்காத தோனியின் விளையாட்டை பார்க்க ரசிக்கின்றனர்.
முதல் போட்டியில் தோல்வி
இப்படி இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் சிஎஸ்கே அணி விளையாடிய முதல் போட்டியிலயே குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இதற்கு காரணம் சென்னை அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் எவரும் இல்லை என்பதை முதல் காரணம். இதை தொடர்ந்து இரண்டாது போட்டியாக லக்னாவுன் மோதிய சிஎஸ்கே அணி லக்னோ அணியை வெற்றி பெற்றாலும் நடைபெற்ற அந்த போட்டியில் சிஎஸ்கே அணி பவுலிங் சரியாக இல்லை என்று ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டார்கள்.

சிஎஸ்கே பவுலிங் பற்றி தோனி கூறியது
இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் பவுலிங் மோசமாக இருந்தது குறித்து அணியின் கேப்டன் தோணியிடம் கேள்வி எழுப்பிய போது. இப்படி சிஎஸ்கே பவுலர்கள் மோசமாக தொடர்ந்து பந்து வீசிக்கொண்டே இருந்தால் அவர்கள் வேறு புதிய கேப்டனின் கீழ் விளையாட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என தோனி கூறியிருந்தார். இப்படி சிஎஸ்கே அணியின் பவுலர்களின் மோசமான பந்து வீச்சாள் வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு குஷியாகும் படி புதிய அப்டேட் ஒன்று சிஎஸ்கே அணி இடம் இருந்து வந்துள்ளது.

சிஎஸ்கே அணியில் இனையும் சிசண்டா
சென்னை அணியில் விளையாடிக் கொண்டிருந்த ஜாமீசன் காயம் காரணமாக விலகிக் கொண்டதால் அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த சிசண்டா மகலா அணியில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளார். சிஎஸ்கேக்கு சிசண்டா மகலா சேர்க்கப்பட்டுள்ளது சிஎஸ்கே அணியின் பலத்தை மேலும் சேர்க்கும் என்று சொல்லலாம். ஆம் சில தினங்களுக்கு முன்பாக நெதர்லாந்துக்கு எதிராக விளையாடிய போட்டியில் 9 ஓவர் வீசிய சிசண்டா மகலா வெறும் 43 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி தன் அணிக்கு வெற்றியை தேடி தந்தார். மேலும் சிஎஸ்கே அணியின் இருக்கும் மகேஸ் தீப்சா என்ற ஸ்ரீலங்கன் வீரர் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசியது ரசிகர்களுக்கு இன்னும் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.




