
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று லக்னோ அணிக்கும் டெல்லி அணிக்கு எதிராக போட்டி நடைபெற்றது. இவ்விரு அணிகளுக்கு வெற்றி முக்கியம் என்பதினால் கடுமையாக போராடினார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்ய அது அவர்களுக்கு சரியாக போகவில்லை. தொடக்கமே விக்கெட் விழுக கேஎல் ராகுல் மட்டும் நிலையாக நின்று விளையாடினர். ஆனால் பின்னர் அவரையும் 39 ரன்களில் ஆட்டமிழக்க. ரன்களை எடுக்க தடுமாறிய லக்னோ பதொனியின் பொறுப்பான ஆட்டத்தினால் 167 ரன்களை எடுத்தது.

பின்னர் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்கத்தில் கொஞ்சம் சொதப்பி தடுமாறியது. மேலும் இடையே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது ரிஷப்-மெக்குர் அடுத்த பந்தின் கேட்சை விட்டனர் லக்னோ. இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட அவர் அடுத்த ஓவர் அதிரடியாக விளையாடி தொடந்து 3 சிக்ஸர்களை அடித்தார். இறுதியில் டெல்லி அணி 18.1 ஓவர்களில் 170 ரன்களை எடுத்து போட்டியை வென்றது.அதில் அதிக பட்சமாக மெக்குரக் 55 ரன்களையும் பண்ட் 41 ரன்களையும் அடித்து இருந்தனர்.

இதுவரை லக்னோ அணி அவர்களது சொந்த மைதானத்தில் 167 ரன்களை முதலில் அடித்து இது வரை தோல்வியை தழுவியதே கிடையாது.ஆனால் இந்த சாதனயை ரிஷப் பண்ட் நேற்றைய ஆட்டத்தில் முடித்து வைத்தார். நேற்றைய போட்டியில் அது மட்டும் அல்லாமல் ராகுல் அல்லது ரிஷப் பண்ட் இருவரில் யார் T20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறுவார்கள் என கேள்வியும் எழுந்துள்ளது. அதில் இருவரும் பேட்டிங் மற்றும் கீப்பிங் என சிறப்பாகவே செயல்படுத்தி இருந்தனர். இந்த போட்டியின் வெற்றி குறித்து கூறுகையில்,

நாம் சாம்பியன்களாக சிந்திக்க வேண்டும், தற்போது தான் நிம்மதியாக உள்ளது. கடினமாக போராட வேண்டும் என்று வீரர்களிடம் கூறினேன். சில தனிநபர்கள் பொறுப்பேற்க வேண்டும். நாம் ஒரு அணியாக ஒன்றுபட வேண்டும். எங்களுக்கு இருந்த பிரச்சனை முகாமில் பல காயங்கள் இருந்தது தான். 10 அணிகள் இருப்பதால், வீரர்களைப் பெறுவது கடினம். நாம் ஒரு சாக்கு சொல்லலாம் அல்லது கற்றுக்கொள்ளலாம். தற்போது தான் எண்களின் சிறந்த 11 பெற்றுள்ளோம் என நினைக்கிறன். என்றும் அவர் கூறி இருந்தார்





