
ஐபிஎல் 2023தொடரின் 58வது போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் SRH vs LSG இடையே ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக மூன்றாவது நடுவர் தவறான முடிவை எடுத்தாக மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சலசலப்பை ஏற்படுத்தியது தற்போது ஷோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.
After a controversial reversal of no ball decision by the third umpire, the SRH fans in the stadium are showing their frustrations at the LSG dugout.
— 12th Khiladi (@12th_khiladi) May 13, 2023
The crowd were also heard chanting, "Kohli, Kohli" with Gambhir in the dugout 👀
📸 JioCinema#SRHvLSG #SRH #SRHvsLSG pic.twitter.com/jPti6MyaFe
இன்று நடத்து வரும் ஹைதராபாத் vs லக்னோ போட்டியில் கேப்டன் எய்டன் மார்க்ரம் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா ஆரம்பத்திலேயே 7 ரன்களில் ஆட்டமிழக்க, அதற்கு பிறகு வந்த ராகுல் திரிபாதிஅதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 20 ரன்களை விளாசினார். அதற்கு பிறகு வந்த அன்மோல்ப்ரீத் சிங் சிறப்பாக விளையாடு 27 பந்துகளில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
kohli kohli kohli chants in hyderabad🔥#SRHvLSG • @imVkohli ❤️🔥 pic.twitter.com/Riw27F7LVC
— Troll RCB Haters (@_TrollRCBHaters) May 13, 2023
பின்னர் மார்க்கரம் 28 ரன்களில் ஆட்டமிழக்க அதிரடியாக ஆடிய க்ளாஸென் 29 பந்துகளில் 47 ரன்களை விளாசினார். இறுதியில் லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் தான் 19 ஓவர்களில் ஒரு சம்பவம் நடந்தது. அதாவது 18வது ஓவரை அவேஷ் கான் பந்துவீசினார். இந்நிலையில் அந்த ஓவரின் 3வது பந்தில் அப்துல் சமத் எதிர்கொண்ட நிலையில் அது இடுப்பிற்கு மேலே சென்றது.
That's something!!! pic.twitter.com/5YrnQ5kak7
— Heisenberg (@Heisenb02731161) May 13, 2023
கள நடுவர் அதை நோ பால் என்று கூறினார். ஆனால் க்ருனால் பாண்டியா DRS எடுக்க முன்றாவது நடுவர் பேட்ஸ்மேன் சிறிது குனிந்த வாறு இருந்ததினால் நோ பால் இல்லை என்று கூறினார். இதனால் சன் ரைசர்ஸ் வீரர்கள் மத்தியில் அதிர்ப்த்தி ஏற்பட்டு கள நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஹைதராபாத் ரசிகர் ஒருவர் லக்னோ அணி வீரர்கள் அமர்ந்திருந்த பெவிலியனில் எதோ ஒன்றை கொண்டு வீசியதாக கூறப்படுகிறது.
Reminder, never ever mess with KOHLI! 🔥
— Mahirat (@bleedmahirat7) May 13, 2023
Feel for GG morning lost the elections afternoon fan shouting kohli kohli behind his dug out. 🤣🤣 pic.twitter.com/UPPTyneQ26
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்ட நேரத்தில் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் போது மைதானத்தில் இருந்த ரசிங்கர்கள் கோலி கோலி என்று கோஷமிட்டனர். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது





