இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தி அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியானது நேற்று தரம்சாலாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் வீரர் அஷ்வினும் இங்கிலாந்து அணியின் வீரர் பேர்ஸ்டோவும் தங்களது 100வது டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கினார்கள் இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

நேற்றையஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்த இங்கிலாந்து அணி இந்தியா அணியின் பந்துவீச்சு சமாளிக்க முடியாமல் திணறியே வந்தது. அதிலும் குறிப்பாக சுழற்பந்து வீச்சின் ஆதிக்கமே தான் அதிக அளவில் இருந்தது. இன்றைய போட்டியில் அவர்களது ஆதிக்கமே அதிகம் இருந்ததால் அனைத்து விக்கெட்டுகளையும் சுழல் பந்துவீச்சாளர்கள் மட்டுமே அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதில் நூறாவது போட்டியில் களம் இறங்கிய அஸ்வினும் தனது கடமைக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. அதில் இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக க்ராலி 69 ரன்களையும் பேர்ஸ்டோ 29 ரன்களையும் ஜோ ரூட் 26 ரன்களையும் போக்ஸ் 24 ரன்களையும் அடித்திருந்தனர் இந்திய அணியின்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அதற்கு பின் வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார். இந்திய அணியின் சார்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் நான்கு விக்கெட்டுகளையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

இந்திய அணி இன்றைய நாள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 473 ரன்களை குவித்து 255 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதில் ரோஹித் ஷர்மா மற்றும் கில் சதத்தை பூர்த்தி செய்து இருந்தார்.அதுமட்டுமல்லாமல் மூன்று வீரர்கள் அரைசதத்தை பூர்த்தி செய்து இருந்தனர். இதில் சுப்மன் கில் 150 பந்துகளில் 110 ரன்களை அவர் அடித்து இருந்தார். போட்டி குறித்தும் அவரது தந்தை அவருக்கு அளித்த சப்போர்ட் குறித்தும் அவர் கூறுகையில்,
சர்வதேச விளையாட்டில் நான் விளையாடுவதை பார்ப்பது இதுவே முதல் முறை. நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது அவருடைய தொலைநோக்குப் பார்வையாக இருந்தது, இன்று எனது முயற்சியில் அவர் பெருமைப்படுவார் என்று நம்புகிறேன். அந்த நேரத்தில் பந்து பெரிதாகச் செயல்படவில்லை என்று நினைத்தேன், உள்ளுணர்வாக நான் மேலே செல்ல விரும்பினேன். அன்டர்சனுக்கு எதிராக அவருக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
Shubman Gill " It's my father's dream to see me play at this level. It was his vision,I think he will be proud of my efforts today.I missed out on a big one,I hope every time I go into the bat, I will be able to convert these starts into a big one "pic.twitter.com/WjdVsvd8OF
— Sujeet Suman (@sujeetsuman1991) March 8, 2024
ஒவ்வொரு முறையும் நான் பேட்டிங் செய்ய வெளியே செல்லும் போது நன்றாக உணர்கிறேன், இன்று நான் அந்த பந்தில் (அவர் ஆட்டமிழந்ததை) தவறவிட்டேன். நான் அந்த பந்தை சரியாகப் பார்க்கவில்லை, ஆனால் ஒவ்வொரு முறையும் நான் பேட்டிங் செய்ய வெளியே செல்லும் போது நன்றாக உணர்கிறேன், மேலும் இந்த தொடக்கங்களை பெரியதாக மாற்றுவேன் என்று நம்புகிறேன். அந்த அரட்டையை எங்கள் இருவருக்கும் இடையில் வைத்துக்கொள்வது நல்லது என்று நினைக்கிறேன்





