வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரானது தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இங்கிலாந்தை இரண்டு போட்டிகளில் வீழ்த்திய ஆஸ்திரலியா 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. இதனால் தங்களுடைய மண்ணில் 3 வது போட்டியில் தோற்றுவிட கூடாது என்று இங்கிலாந்து மூன்றவது போட்டியில் வெல்ல கடுமையாக முயற்சி செய்து வருகிறது. தற்போது இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற இந்த செய்தியை எழுதும் வரையில் 132 ரன்கள் தேவை.

இதனிடையே இந்த போட்டியில் ரசிகர்களின் செயல்பாடு மோசமாக இருப்பதாகவும், ஸ்மித் அம்மா விளையாட்டை காண வந்த பொது அவரிடம் தவறான முறையில் வம்பிழுத்தாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியா தனிப்பட்ட முறையில் பாதுகாப்பை கேட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த போட்டியில் உள்நாட்டு அணியை ரசிகர்கள் அதிகமாக ஆதரிக்கின்றார் என்றும் இது இந்தியாவில் ரசிகர்கள் செய்வதை போல இருக்கிறது என்று வர்ணனையாளர்கள் பேசியிருக்கின்றனர்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர். இது குறித்து அவர் கூறுகையில் “ஒரு அணியின் மைதானத்தில் உள்ள ரசிகர்கள் தங்களது அணிக்கு ஆதரவு கொடுப்பதும், எதிரணிக்கு ஆதரவு கொடுக்காமல் அமைதியாக இருப்பதும் இயற்கையான ஒன்றுதான். ஆனால் இதனால் இந்தியாயின் மட்டும்தான் நடக்கிறது என்று கூறுவது மிகவும் அபத்தமானது.

இந்த இந்தியாவில் மட்டுமே நடைபெறுவது கிடையாது. அணைத்து நாடுகளிலும் மைதானத்தில் ரசிகர்கள் அமைதியாக இருந்தால் எதிரணி பவுண்டரி அடித்திருக்கும், அல்லது அவர்களுடைய பேட்ஸ்மேன் ஆட்டமிழந்திருப்பர். தற்போதைய ஆஷஸ் தொடரை விட வேறு எங்கும் இது தெளிவாகத் தெரியவில்லை. வெளிநாட்டு வர்ணனையாளர்கள் இந்தியாவுக்கு வரும்போது, இந்திய பேட்டர் அவுட்டாகும்போது அல்லது இந்திய பந்துவீச்சாளர் பவுண்டரி அடிக்கும்போது மைதானத்தில் இந்திய ரசிகர்கள் எவ்வளவு அமைதியாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்

டே இருக்கிறார்கள்.
4 ஆண்டுகளுக்கு முன்பு விளையாடிய ஒரு வரலாற்று இன்னிங்ஸின் காரணமாக தங்கள் சிறப்பாக விளையாடுவதாக எண்ணிக்கொள்கின்றனர்.பொதுவாக, லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவின் ஸ்டம்பிங் செய்து விக்கெட் எடுத்த போது அதை பற்றி கிரிக்கெட் உலகம் மும்முரமாக விவாதிக்கும் போது, பென் ஸ்டோக்ஸின் அற்புதமான இன்னிங்ஸின் அப்படியே காணாமல் போனது.
இது மிக முக்கியமான நிகழ்வுகளை சிறிய விஷயங்கள் எப்படி மறைக்கின்றன என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று ஊடகங்களை விமர்சித்தார் கவாஸ்கர்.மேலும் இது பல ஆண்டுகளாக வெளிநாட்டு ஊடகங்கள் பயன்படுத்தும் வழக்கமான திசைதிருப்பும் தந்திரமாகும் என்றும். அவர்களின் அணியின் பெரிய தோல்வியை மறைக்க ஒரு சிறிய முக்கியமற்ற சம்பவம் பெரிதாக்குகின்றனர் என்று கடுமையாக விமர்சித்தார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர்.





