உலக கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டிய நிலையில் இந்தியா தன்னுடைய கடைசி லீக் ஆட்டத்தை நேற்று விளையாடியது. இந்த போட்டியில் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடிய 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழுந்து 410 ரண்களை குவித்து இருந்தனர்.

84 பந்துகளில் தனது உலகக்கோப்பை முதல் சதத்தை பூர்த்தி செய்தார் ஷ்ரேயஸ் ஐயர். அதன் பின்பு அதிரடியை காட்டதொடங்கிய கே.எல் ராகுல் சதத்தை பூர்த்தி செய்தார் 102 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்து வெளியேறினார். ஷ்ரேயஸ் ஐயர் 128ரன்களையும் குவித்து இருந்தார். இதன் மூலம் இந்தியா அதிகமான ரன்களை விலாச முடிந்தது. மேலும் நெதர்லாந்து அணியை அழுத்தத்திற்கு உள்ளாக்கி வெல்லவும் முடிந்தது.
இந்த நிலையில் தான் ராகுல் மற்றும் ஸ்ரேயஸ் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரரான சுனில் கவாஸ்கர். அவர் கொடுத்த பேட்டியில் கூறுகையில் “ராகுல் அந்த ஷாட்டின் மூலம் அந்த சதத்தை எட்டியது, ஒரு நம்பமுடியாத ஷாட். ஐபிஎல்லில் அவர் அதைச் செய்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். உலகக் கோப்பையில் சதம் அடித்ததற்காக அதை அவர் வெளியே கொண்டுவந்தது பார்ப்பதற்கு அருமையாக இருந்தது.

இந்த கே.எல். ராகுல் தான் நமக்குத் தெரிந்த கே.எல். ராகுல். இவ்வளவு காலமாக நாங்கள் பார்க்க முடியாமல் இருந்த கேஎல் ராகுலை இப்போது இறுதியாகப் பார்க்கப் போகிறோம் என்று நினைக்கிறேன். தற்போது இந்திய அணியில் எல்லாம் தெளிவாக இருக்கிறது, பயிற்சியாளர், கேப்டன் மற்றும் துணை ஊழியர்களால் எல்லாம் தரப்படுகிறது.
அவர்கள் அதைச் சரியாக செயல்படுத்துகிறார்கள், மேலும் அப்படி செயல்படுத்திவது தான் கடினமான பகுதி என்று KL ராகுல் பேசுவதை நாங்கள் கேள்விப்பட்டோம். நீங்கள் என்ன திட்டமிட்டாலும், இந்த கிரிக்கெட் விளையாட்டு என்பது எப்போதுமே உங்களுக்கு ஆச்சரியத்தை அளித்து வருகிறது.

நம்பர் 4 மற்றும் நம்பர் 5 இல் என்ன நடக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது, முதல் மூன்று பேர் அரை சதங்களைப் பெற்றபோது சதங்களைப் பெறுவது, அவர்கள் எவ்வளவு சிறப்பாக பேட்டிங் செய்தார்கள் என்பதை உங்களுக்குச் சொல்கிறது. இருவரும் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தனர். ஷ்ரேயாஸ் மற்றும் ராகுல் – அற்புதம், பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது, இது அரையிறுதி போட்டிக்கு ஒரு நல்ல சகுனம் என்றார் சுனில் கவாஸ்கர்.



