மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் ஹர்டிக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்து தலை குனிந்தது. வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற நிலையில் கடைசி போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் 5 (4) ரன்களிலும் சுப்மன் கில் 9 (9) ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய 17/2 என்ற தடுமாறி பின்னர் 20 ஓவர்களில் இந்தியா 165/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ்க்கு அதிரடியாக விளையாட எளிதான வெற்றி பெற்றது. இதனால் வித்தியாசமான பரிசோதனைகளை செய்யும் ராகுல் டிராவிட் மீது நெட்டிசன்கள் பாலரும் குற்றசாட்டுகளை வைத்தனர்.
அது போக அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கடந்த 2006க்குப்பின் 17 வருடங்கள் கழித்து முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தோற்றுள்ளது. குறிப்பாக 2023 உலக கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாத வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா போன்ற சர்வதேச கிரிக்கெட்டில் பலமான அணியை வீழ்த்தியது குறித்தும் கடுமையான விமர்சனங்கள் வந்த வண்ணமாக இருக்கும் நிலையில் தான் சுனில் கவாஸ்கர் இந்த விவாதம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தோல்வியை இந்தியாவிற்கு ஒரு குறையாக பார்க்க கூடாது. ஐசிசி டி20 உலகக் கோப்பையை அவர்கள் இருமுறை வென்றுள்ளனர் என்பதையும், ஐபிஎல்லில் அவர்கள் விளையாடும் வெவ்வேறு உரிமையாளர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர்கள் மேட்ச்வின்னர்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். எனவே அவர்கள் ஒரு உயர்தர டி20 அணி. எனவே அவர்களிடம் தோற்றதில் இந்தியாவுக்கு அவமானம் இல்லை.

இருப்பினும் இந்தியா தனது பக்கத்தை வலுப்படுத்த மேம்படுத்த வேண்டிய பகுதிகளைப் பார்ப்பதற்கு இந்த நிகழ்வு ஒரு விழிப்புணர்வாக இருக்க வேண்டும். இந்தத் தொடருக்காக ஓய்வெடுக்கப்பட்டவர்களில் சிலர் நீண்ட காலம் இந்தியாவிற்காக விளையாட மாட்டார்கள். எனவே அடுத்த ஐசிசி டி 20 உலகக் கோப்பை இன்னும் ஒரு வருடத்தில் இருப்பதால் அவர்களுக்கு மாற்று வீரர்களை மிக விரைவாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

இந்த தொடரில் சில முக்கிய வழக்கமான வீரர்கள் ஓய்வெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை நினைவில் கொள்வது நல்லது. எனவே இது முழு வலிமை கொண்ட இந்திய டி20 அணி அல்ல. சில விஷயங்கள் நம்பிக்கை அளித்தாலும், மற்றவை ஏமாற்றத்தை அளித்தன. குறிப்பாக வீரர்களின் மனோபாவங்கள் ஏமாற்றமாக இருந்தது. மிக உயர்ந்த மட்ட கிரிக்கெட்ல் மனோபாவம் தாம் பெரியவர்களை சிறுவர்களிடமிருந்து காட்டும். அதற்கு சர்வதேச விளையாட்டை விட அதிக சோதனை எதுவும் இருக்க முடியாது என்றார் சுனில் கவாஸ்கர்.




