நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சில ஓவர்களில் மட்டுமே கை கொடுத்தது என்று சொல்லலாம் அதன் பின்பு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் உடன் இணைந்து துபேவும் சென்னை அணிக்கு ரண்களை குவித்து வந்தனர். அதன் பின் இறுதியாக வந்த சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தல தோனியும் அவரது பங்கிற்கு கடைசி நான்கு பந்தில் 20 ரன்களை அடித்தார்.

தோனி குவித்திருந்தார் மும்பை அணி ஆரம்பத்தில் பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசினார்கள் ஆனால் அதன்பின் அவர்களால் சிறப்பாக ஜொலிக்க முடியவில்லை ஹர்திக் பாண்டியாவும் அதிக ரன்களை வாரி கொடுத்து இருந்தார். எனவே சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து206 ரன்களை குவித்தது. ரஹானே ஆரம்பத்தில் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் ரச்சின் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இருந்தார்.
அதன் பின் ருதுராஜ் சிறப்பாக அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 69 ரன்களை குவித்து இருந்தார் அதில் 5 சிக்சரும் 5 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கம் சிற்பபாக இருந்தது. ரோஹித் சர்மாவும் ஆட்டமிழக்காமல் விளையாடி கொண்டிருந்தார். ஆனால் ஒருகட்டத்தில் இஷான் கிஷான் விக்கெட் விழுக அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மேலும் கேப்டன் ஹர்திக் பந்தியாவும் ஆறு பந்துகளை 2 ரன்களை மட்டுமே நடித்திருந்தார். இறுதியில் மும்பை அணி 30 ரங்களுக்கு தோல்வியை தழுவியது.

இந்நிலையில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி 4 பந்துகளில். 6,6,6,2 என அந்த ஓவரை சிறப்பாக அடித்து இருப்பார். இது மும்பை அணியின் தோல்விக்கு முக்கிய காரணியாக இருந்தது என்று சொல்லலாம், மேலும் தோனி 20 ரன்கள் அடிக்க சென்னை அணியும் 20 ரன்களை வித்தியாசத்தில் வென்றதினால் மும்பை அணியின் இந்த தோல்விக்கு ஹர்திக் பாண்டியாதான் காரணம் என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் ஹர்திக் பாண்டியா குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் :நான் நீண்ட காலமாக பார்த்ததிலேயே மிக மோசமான பந்துவீச்சு. அவர் சிக்ஸருக்கு அடிக்கும் விதமான பந்துகளை நான் வீசவேண்டும். ஒரு சிக்ஸர் பரவாயில்லை. பிறகு மீண்டும் ஒரு லென்த் பந்தை வீசினார் ஹர்திக் பாண்டியா. கடைசி நேரத்தில் பேட்ஸ்மேன்கள் அந்த விதமான லெந்த் பந்திற்காகத்தான் காத்திருப்பார்கள். ஆனால் பின்னரும் ஹர்திக் பாண்டியா ஒரு லெந்த் பந்தை வீசினார். பின்னர் மூன்றாவது பந்து புல்டாஸை வீசினார். அதுவும் சிக்சருக்கு பறந்தது.
ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சு முற்றிலும் சாதாரண பந்துவீச்சு, அவருடைய கேப்டன்சி சாதாரண கேப்டன்சி. ஷிவம் துபேவுடன் இணைந்து ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தாலும் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் 185-190 ரன்கள் வரை கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அதை தவறவிட்டது மும்பை என்றார் சுனில் கவாஸ்கர்.





