உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று நடந்த போட்டியில் பலம் வாய்ந்த இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதினர் டாஸ் வென்று இங்கிலாந்து அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த உலக கோப்பையில் முதன் முதலாக இந்திய அணி முதலில் பேட்டிங்கை செய்தது. அது அவர்களுக்கு சற்று கடினமாகவே இருந்தது.

இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை மட்டுமே அடித்தது. இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் சிறிய இலக்கை காக்க தயாராகியது இந்தியா. 230 என்று இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்து இந்தியாவின் பந்து வீசை சமாளிக்க முடியாமல் 34.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது.
இந்தியா அணி முதலில் பேட்டிங் சரியாக விளையாடவில்லை என்றாலும் பின் பந்து வீச்சு அபாரமாக செயல்பட்டனர். அப்படி இந்தியாவின் பந்துவீஹில் பெரும் பங்கற்றியவர் முகமது சமி . அவர் இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இந்த உலககோப்பை போட்டியில் 2 போட்டிகளை மட்டுமே ஆடியுள்ள சமி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் இந்த அற்புதமான பந்துவீச்சை பாராட்டி கருத்து கூறியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரர் சுனில் கவாஸ்கர். அவர் கூறுகையில் “அங்கே நிறைய கடின உழைப்பு இருக்கிறது, அவர் தன்னுடைய வீட்டில் நிறைய ஆடுகளங்களை உருவாக்கி அவர் அங்கு பந்துவீசி பயிச்சி செய்கிறார். அதுதான் முக்கியம். அவர் தனது தனிப்பட்ட கிரிக்கெட் உடற்தகுதியை கவனித்து வருகிறார்.

அவருடைய ஸ்பெஷாலிட்டி என்ன? இது வேகப்பந்து வீச்சு. அவர் தங்கியிருக்கும் வலைகளில் பல ஓவர்கள் வீசுவதன் பயிற்சி பெறுகிறார். நாள் முழுவதும் ஜிம் செய்யலாம். ஆனால் நாள் முடிவில் முகமது ஷமி, கபில் தேவ் என்ன செய்தாரோ, அதையே சரியாகச் செய்கிறார், வெறும் பந்துவீச்சு மற்றும் வலைகளில் பந்து வீசிக்கொண்டே இருப்பார்.
பயோ-மெக்கானிக் நிபுணர்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை. ஒரு வேகப்பந்து வீச்சாளராக, அவர் பந்துவீச ஓடும்போது அவருக்கு கால்களுக்கு அதிக மைலேஜ் தேவை என்பதை அவர் அறிவார். அவருடைய ரிதம் அது மிகவும் நன்றாக இருக்கிறது. அவர் மைதானத்தில் ஓடும்போது, ட்ரோன் கேமரா அதைப் பிடிக்கும்போது, சிறுத்தை ஓடுவது போல் காட்சியளிக்கிறார். இது ஒரு அற்புதமான காட்சி என்று கூறினார் கவாஸ்கர்.



