இந்திய அணியின் நட்சத்திர வீரராகவும் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராகவும் இருப்பவர் சூரியகுமார் யாதவ். அவருக்கு கடந்த வருடம் தென்னாபிரிக்க தொடரின் போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுக்க வேண்டியதிருந்தது. அதிலிருந்து குணமாகிய சூரியகுமார் யாதவ் மீண்டும் மும்பை அணிக்காக ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் சூரியகுமார் யாதவ் தான் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்த போது இருந்த சூழல் குறித்து பேசிய வீடியோ ஓன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதில் பேசியுள்ள சூரியகுமார் யாதவ் தான் எப்படி காயத்திலிருந்து திருப்பி மீண்டும் அணிக்கு திரும்பியது குறித்து பேசியிருந்தார்.
அவர் கூறுகையில் : அந்த நிகழ்வால் தான் நான் நேரத்துக்குத் தூங்குவது, நல்ல டயட்டைப் பின்பற்றுவது போன்ற சிறிய விஷயங்களைச் செய்வதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். நான் என் வாழ்நாளில் ஒரு புத்தகத்தைப் படித்ததில்லை, அதையும் செய்ய ஆரம்பித்தேன். காலையில் எழுந்து நல்ல நேரத்தைச் செலவிடுகிறேன். மறுவாழ்வு மையத்தில், என் உடல், மூளை அனைத்தையும் மறுவாழ்வு மையத்துடன் இணைத்து, அது கொஞ்சம் வேகமாக குணமடைய எனக்கு மிகவும் உதவியது.

எனக்கு ஒரே நேரத்தில் 2-3 நிக்கிள்ஸ் இருந்ததால், நான் அதை ஒரு நேரத்தில் எடுக்க வேண்டியிருந்தது. நான் எப்படி திரும்பி வர வேண்டும் என்பதை முடிவு செய்வது எனக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. என் மனைவி மற்றும் என்சிஏவில் உள்ள அனைவரிடமும் நான் பேசியபோது அது உங்களின் இரண்டாவது பதிப்பாக இருக்க வேண்டும் என்று சொன்னார்கள், அங்கு நான் சற்று வித்தியாசமாக இருக்கிறேன்.
உங்க டீம் விளையாடும் போது எப்பவும் கடினமான ஓன்று நீங்க ரூம்ல உட்கார்ந்து பார்த்துட்டு இருக்கீங்க. நான் பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது, பெங்களூரில் 10.30 மணிக்கெல்லாம் சரியான நேரத்துக்கு தூங்கியதால் பாதி ஆட்டங்களை பார்ப்பேன்.
ஆனால் அடுத்த நாள் முழு ஆட்டத்தையும் ஹைலைட்ஸில் பார்ப்பேன். அது கடினமாக இருந்தது, ஆனால் அவர்கள் அங்கு விளையாடுகிறார்கள், நான் வேலை செய்ய வேண்டும் என்று அவர்களைப் பார்த்து அது எனக்கு நிறைய ஊக்கத்தையும் உத்வேகத்தையும் கொடுத்தது. மிகவும் கடினமாக நான் குணமடையவும் உழைத்து, சீக்கிரம் அங்கிருந்து வெளிவர முயற்சி செய்தேன் என்றார் சூரியகுமார் யாதவ்.





