
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்ற தென் ஆப்பிரிக்கா அணியை மூன்று வடிவ போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் தற்போது இந்திய அணி முதலாவது கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடி வந்தது. அதில் முதல் போட்டி சில நாட்களுக்கு முன் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்னும் மிஞ்சி இருக்கும் இரண்டுவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் இந்திய அணி வென்று தொடரை சமன் செய்தது.

ஆரம்பம் அதிரடியாக இருந்தாலும் கில் 12 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் திலக் வர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். இருப்பினும் கேப்டன் நிதானமான ஆட்டத்தால் இந்திய அணி 2௦ ஓவர்கள் முடிவில் 200 ரன்களை குவித்திருந்தது. இந்தியா அணியின் அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 100 ரன்களும் ஜெய்ஸ்வால் 60 ரன்களும் ரின்கு சிங் 14 ரன்களையும் குவித்து இருந்தனர் . எனவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. தென்னாபிரிக்கா அணி சார்பில் வில்லியம்ஸ் மற்றும் மகாராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஷம்சி மற்றும் பர்கர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

தென்னாபிரிக்கா அணி ஆரம்பத்தில் இருந்து தடுமாறி வந்த நிலையில் 13.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்னில் ஆட்டமிழந்தது. தென்னாபிரிக்கா அணியின் சார்பில் அதிகபட்சமாக மில்லர் 35 ரன்களும் மார்க்கரம் 25 ரன்களும் டோனோவன் ஃபெரேரா 12 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தனர். இந்திய அணி சார்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.
இறுதியில் இந்திய அணி சூர்யகுமார் யாதவ் அடித்த தனிப்பட்ட ரன்னை கூட எட்டமுடியாமல் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியில் சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் 100 ரன்களை குவித்து ஒரு சாதனையை படைத்தது இருந்தார். இதில் 7 பவுண்டரிகளும் 8 சிக்சர்களையும் அடித்து இருந்தார். சூர்யாகுமாரின் அதிரடி ஆட்டம் குறித்து முன்னால் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,

சூர்யாவின் அனைத்து டி20 ஐ சதங்களும் வெவ்வேறு நாடுகளில் வந்துள்ளன. எனவே, அவர் ஒரு பிளாட் டிராக் என்று கூட சொல்ல முடியாது. இந்தியா மூன்றாவது T20I ஐ வென்றது அவரால்தான். ஜெய்ஸ்வாலும் மேலே நன்றாக விளையாடினார். அவர் வடிவங்கள் முழுவதும் அணியில் ஒரு அங்கமாக இருக்க ஒரு அறிக்கையை வெளியிடுகிறார், “சோப்ரா கூறினார். என் கருத்துப்படி, இந்த நேரத்தில், அவர் சிறந்த டி20 பேட்டர். தற்போது அவரை விட சிறந்தவர்கள் யாரும் இல்லை. 2024 டி20 உலகக் கோப்பை உட்பட அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் தொடர்ந்து விளையாடினால், அவர் விளையாட்டை விட்டு வெளியேறும் போது அவர் சிறந்த டி20 பேட்டராக ஓய்வு பெறலாம்,” என்று சோப்ரா முடித்தார்.





