இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்கள் தமிழ் நாட்டில் இருந்து சென்று சாதித்திருக்கின்றனர். குறிப்பாக அஸ்வின், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுத்தர், பாத்ரினாத், பாலாஜி, விஜய் சங்கர் போன்ற பலரை சொல்லிக்கொண்டே போகலாம், அப்படி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்த சாதரண குடும்பத்தில் பிறந்து தன்னுடைய விடா முயற்சியால் இந்திய அணி வரையில் சென்றவர் தான் கிரிக்கெட் வீரர் நடராஜன்.

நடராஜன் கடந்த 2020 ஐபிஎல் தொடரில் தன்னுடைய அசாதாரணமான யாக்கர்களின் மூலம் பிரபலமானர். இந்நிலையில் அதே வருடம் 2020ஆம் ஆண்டின் போது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் வலைப்பயிற்சி வீரராக சென்றிருந்தார். அப்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளருக்கு காயம் ஏற்படுத்தினால் அவருக்கு பதிலாக களமிறங்கிய நடராஜனின் யாக்கர்கள் கண்டு சர்வதேச வீரர்களே பாராட்டும் அளவிற்கு சிறப்பாக பந்துவீசினார்.
அதே போல காபா மைத்தனத்தில் இந்தியா பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு நடராஜனும் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடதக்கது. இதனையடுத்து மீண்டும் 2021 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக இரண்டு போட்டிகள் விளையாடிய பிறகு அறுவை சிகிச்சை காரணமாக விளையாடவில்லை. பின்னர் கொஞ்ச காலம் கழித்து காம்பேக் கொடுக்கலாம் என்ற நினைத்த நடராஜனுக்கு கொரோன பாசிட்டிவ்வாக இருந்ததால் விளையாட முடியவில்லை.

இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரிலும் விளையாடினார். இப்படிப்பட்ட நிலையில் தான் தன்னை போன்ற திறமையுள்ள வீரர்களுக்காக ஒரு மைத்தனத்தை காட்டுவதே தன்னுடைய கனவு என்று ஒரு பேட்டியில் கூறியிருந்த நடராஜன் அதனை தற்போது நிஜமாக மாற்றியுள்ளார். அதவது சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள திறமையுள்ள கிரிக்கெட் வீரர்கள் விளையாட சர்வதேச தரத்திலான நவீன வசதிகளுடன் கூடிய மைத்தனத்தை காட்டியுள்ளார் நடராஜன்.
Natrajan's Finger was Jammed into Door.
— CricketGully (@thecricketgully) June 24, 2023
📹 (Ilampillai_Memes / Instagram) pic.twitter.com/W6M4qttxJS
இப்படியொரு நிலையில் தான் இந்த திறப்பு விழாவின் போது நடராஜனின் கையானது கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்டது. அப்படி மாட்டியபோது வலியால் துடித்த நடராஜன் பின்னர் அதற்கு மருந்து போட சென்று விட்டார். இந்த காயம் பெரிதாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும். இது தொடர்பான வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நடராஜன் மைத்தனத்தின் திறப்பு விழாவின் போது சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, CSK CEO காசி விசுவநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ஆர்.ஜ.பழனி, கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக், நடிகர்கள் யோகி பாபு, KPY புகழ் என பலர் கலந்து கொண்டு மைதான திறப்பு விழாவை சிறப்பித்தனர்.





