ஐபிஎல் போட்டியில் கலக்கிய ஜெய்ஸ்வாலுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் முதல் டெஸ்ட் போட்டியிலேயே 150 ரன்களுக்கு மேலே அடித்தார். அதனை தொடர்ந்து தனக்கு கிடைத்த முதல் டி20 அறிமுகப்போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் 2வது போட்டியில் பந்துகளை அணைத்து புறமும் பறக்க விட்டார். மறுபுறம் கடந்த போட்டியில் சொதப்பிய சுப்மன் கில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக விளையாடினார்.

இந்த இளம் தொடக்க வீரர்கள் ஜோடி சேர்ந்து 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடம்பிடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது. ஆனால் நேற்று நடந்த மிகவும் முக்கியமான டி20 போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு மறைமுகமாக ஜெய்ஸ்வாலின் விக்கெட்டும் ஒரு காரணம் என்று கூறலாம். ஏனென்றால் 5வது போட்டியில் தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ஸ்டட்ச் ஷாட் அடித்த அவர் 4வது பந்தில் ஆட்டமிழந்தார்.
மேலும் இவருக்கு பிறகு சுப்மன் கில்லும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் இந்த தொடக்க ஜோடி மீண்டும் ஒரு முறை பொய்த்து போனது. இப்படிபட்ட நிலையில் கடந்த போட்டிகளால் ஜெய்ஸ்வாலை புகழ்ந்து பேசிய முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா 5வது போட்டியின் தோல்விக்கு பிறகு ஜெய்ஸ்வால் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் ” யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதலில் ஆட்டமிழந்ததை பார்ப்பதற்கு அவர் கொஞ்சம் இந்த போட்டியை குறைத்து மதிப்பிட்டு விட்டாரோ என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். பொதுவாக நீங்கள் இளமையுடன் இருக்கும் போது இது போன்ற சில விஷயங்கள் நடக்கும். யஷஸ்வி ஜெய்ஸ்வால் பயமில்லாதவர் தான். ஆனால் எல்லாவற்றிலும் இடையே மிக மெல்லிய கோடு ஓன்று உள்ளது. அதை ஜெய்ஸ்வால் சில முறை கடப்பதை நீங்கள் பார்ப்பீர்கள் என்றார் சோப்ரா.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடியபோது நான் வர்ணனை செய்து கொண்டிருந்தேன். ஆனால் அவர் விரைவில் ஆட்டமிழப்பர் என்று நான் நினைத்தேன். உண்மையில் எனக்கு அவருடைய விளையாட்டு மிகவும் பிடிக்கும். அவர் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர். ஆனால் அப்போது அவர் ஆட்டமிழப்பர் என்று தோன்றியது அதே போல ஆட்டமிழந்தார் என்றார் ஆகாஷ் சோப்ரா.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் வரும் ஆசிய போட்டிகள் தொடரில் பங்கேற்க உள்ளார். மேலும் அயர்லாந்திற்கு எதிரான வரும் 18ஆம் தேதி தொடங்கும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றுளார். இதில் கலக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வரும் 2024 டி20 உலக கோப்பையில் இவரின் பெயர் இடம்பெறும் எனப்தில் எந்த சந்தேகமும் கிடையாது.




