இந்திய அணியானது அயலாந்திற்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டவது போட்டி நேற்று ஆகஸ்ட் 20-ஆம் தேதி டப்ளின் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் அயர்லாந்து அணியை 33 ரன்கள் வித்தியாசத்தின் மூலம் இந்தியா இந்த தொடரை (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் அயர்லாந்து அணிக்கு எதிராக சிட்னியா டி20 தொடரில் இதுவரையில் வீழ்ந்ததில்லை என்ற சாதனையையும் தக்க வைத்துள்ளது.

ஆனால் இந்த தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முன்னர் போல ஆடவில்லை என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் இந்த தொடரில் முதல் போட்டியில் 23 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுத்த அவர் பின்னர் 2வது போட்டியில் 11 பந்துகளுக்கு 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும் அவர் பெரிய ஷாட்டுகளை அடிக்க முயற்சி செய்துதான் ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் ருதுராஜ் பொறுமையாகவும் அதே நேரம் சிறப்பாகவும் விளையாடினார்.
இந்த நிலையில் தான் ஜெய்ஸ்வால் பேட்டிங் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரரான ஆகாஷ் சோப்ரா. அவர் கூறுகையில் “யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெரிய-பெரிய ஷாட்களை அடிக்க முயன்றார். அப்படி அவர் மீண்டும் ஒரு ஷார்ட் பந்தில் அடிக்க முயற்சி செய்த போது ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் ஷார்ட் பந்துகளில் சிக்ஸர்களை அடிக்கிறார். ஆனால் அதே ஷார்ட் பந்துகளிலும் ஆட்டமிளகிறார். இது நீங்கள் வெட்டும் அதே வாளால் உங்களை தாக்குவது போன்று இருக்கிறது.

இது நீங்கள் எரிக்கப் பயன்படுத்தும் நெருப்பு சில சமயங்களில் நீங்களே எரிந்து கொள்கிறீர்கள். எனவே யஷஸ்வி இதை மனதில் கொள்ள வேண்டும். நல்ல விஷயம் என்னவென்றால், அவரது விளையாட்டு முறை முற்றிலும் சரியானது. அவர் சிறப்பாக நன்றாக பேட்டிங் செய்தார் மற்றும் கட்சிதமாக அடித்தார். ஆனால் பின்னர் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திலக் வர்மாவும் ஒரு ஷார்ட் ஆடி பந்தில் அவுட் ஆனார்.

அந்த கட்டத்தில் இந்தியா கொஞ்சம் தடுமாறியது. நிஜமாகவே சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் ஒரு முனையில் இருந்தார். அவர் 50 ரன்களுக்கு மேல் எடுக்காதது சற்று துரதிர்ஷ்டவசமானது. சொல்லப்போனால் அந்த இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்திருந்தாலும் ஆட்ட நாயகன் விருது அவருக்கு கிடைக்கவில்லை. அவர் மிகவும் கச்சிதமான பாணியில் விளையாடுகிறார். அவர் விளையாடும் போது வழக்கத்திற்கு மாறான ஷாட்கள் எதையும் நீங்கள் பார்க்க முடியாது என்றார் ஆகாஷ் சோப்ரா.
மேலும் பேசிய அவர் பேசுகையில் சஞ்சு சாம்சன் குறித்தும் பேசியிருந்தார். அவர் கூறுகையில் “சஞ்சு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுதத்தினால் நாம் கேட்கும் வழியில் அவர் விளையாட தொடங்கினார். நீங்கள் எடுத்தவுடன் சந்திரனுக்கு முதல் பந்தை அடிக்க வேண்டியதில்லை. எனவே சஞ்சு சாம்சன் எச்சரிக்கையுடன் விளையாடினார். தொடக்கத்தில் தனக்கு நேரம் ஒதுக்கி பின்னர் நல்ல ஷாட்களை ஆடினார். சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடினார் என்றார் ஆகாஷ் சோப்ரா.




