வெஸ்ட் இண்டீஸ் எதிராக நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. நேற்று நடந்த வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியாவின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் 5 (4) ரன்களிலும் சுப்மன் கில் 9 (9) ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய 17/2 என்ற தடுமாற்று துவக்கத்தை பெற்றது.

ஆனாலும் பின்னர் களமிறங்கிய திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவரும் சிறப்பாக செயல்பாட்டு இந்தியாவிற்கு நல்ல ஸ்கோரை கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனால் திலக் வர்மா 27 (18) ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த சஞ்சு சாம்சன் பொறுப்பின்றி 13 (10) ரன்களில் ஆட்டமிழந்தார். இவரது அவுட் மிகப்பெரிய ஒன்றாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறது.ஏனென்றால் சஞ்சு சாம்சனுக்கு உண்மையில் தொடர்ந்து பல வாய்ப்புகள் இந்திய அணியில் இருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைத்த போதிலும் அதை தவறவிட்ட சஞ்சு சாம்சனுக்கு டி20 தொடரிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த போட்டியிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சான்சன் மீது கடுமையான விமர்சங்களானது தற்போது வைக்கப்பட்டு வருகிறது.அப்படிப்பட்ட நிலையில் சஞ்சு சாம்சன் போட்டியில் களமிறங்கும் இடம் குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய அணியின் வீரர் ஆகாஷ் சோப்ரா.

அவர் கூறுகையில் “ஹர்திக் பாண்டியாவால் தன்னுடைய சரியான ஃபார்மை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இந்த போட்டியில் அவர் ஒரு கட்டத்தில் 16 பந்துகளில் எட்டு ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். நீங்கள் நம்பர் 6ல் பேட் செய்கிறீர்கள் என்றால் கொஞ்சம் உங்களுக்கு தொடக்கம் தேவைப்படலாம். ஆனால் அவர் பந்தை அடிக்க முயற்சி செய்த போது பேட்டில் படவே இல்லை. அவர் ஒரு சிக்ஸர் அடித்தார் அதன் பின்னர் அவுட்டானார்.

திலக் வர்மா ஆட்டமில்லாத பிறகு இந்திய அணிக்கு மீண்டும் ஒருமுறை பேட்டிங்கில் சோதனை ஆரம்பித்தாது. ஆனால் இந்த முறை சஞ்சு சாம்சனை 5-வது இடத்தில் பேட் செய்ய வந்தார். ஹர்திக் பாண்டியாவே 6-வது இடத்தில் வந்தார். சஞ்சு சாம்சன் ஓரிரு நல்ல ஷாட்களை விளையாடினார். ஆனால் அதற்கு பிறகு அவரும் அவுட் ஆனார் என்றார் சோப்ரா.
மேலும் பேசிய அவர் கூறுகையில் “பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்திற்கான ஆடிஷனில் சஞ்சு சாம்சன் எடுத்து விட்டு தற்போது ஏன் அவரை ஏன் மீண்டும் மீண்டும் எண். 5 க்கு அனுப்புகிறீர்கள் என்பதை நான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். ஒருவேளை அவர் நிறைய வாய்ப்புகளை தவறவிட்டாரா? இது என்னுடைய ஒரு பெரிய, பெரிய, பெரிய கேள்வி என்றார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.




