இந்திய அணியானது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் தற்போது இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் 1 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரின் 3 வது போட்டியில் தொடக்க வீரர்கள் தடுமாறிய நிலையில் திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவதும் இணைத்து சிறப்பாக விளையாடினார்கள்.

இந்நிலையில் ப்ளோரிடாவில் இன்று நடந்து முக்கியமான 4வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. ஏனெனென்றல் ஆடுகளமானது பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 178/8 ரன்களை விளாசியது. இதனையடுத்து 179 என்ற இலக்கை துரத்த களமிறங்கிய இந்திய அணிக்கு இந்த போட்டியில் வெற்றியடைந்தே ஆகவேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் அந்த அழுத்திலும் தொடக்க வீரர்களுக்காக கமிறங்கிய யசஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்தனர்.
கடந்த அறிமுகப்போட்டியில் விளையாடிய ஜெய்ஸ்வால் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் இம்முறை பந்துகளை அணைத்து புறமும் பறக்க விட்டார். மறுபுறம் கடந்த போட்டியில் சொதப்பிய சுப்மன் கில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக விளையாடினார். இந்த இளம் தொடக்க வீரர்கள் ஜோடி சேர்ந்து 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடப்பிடித்து இந்தியாவை வெற்றிப் பா

தைக்கு அழைத்து வந்தது.
இந்நிலையில் இன்று இந்தியா மேற்கிந்திய தீவுகளின் சுற்றுப்பயணத்தில் கடைசி போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டியானது இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் முக்கியமான போட்டியாகும் என்பதினால் யார் வெற்றியடைவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஆகாஷ் சோப்ரா சுப்மன் கில் குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் “ஆரம்பத்தில் அணி வேகம் பெறவில்லை என்பதுதான் பிரச்சனையாக இருந்தது. டி20 கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 10ல் எட்டு முறை, உங்கள் பக்கம் வேகம் இருக்க வேண்டும். இதுவரை நீங்கள் 150 ரன்களுக்கு மேல் போட்டிகளை வென்ற பிட்ச்களில் விளையாடிக்கொண்டிருந்தீர்கள். ஆனால் அதற்குப் செட்டிலாக ஆக கொஞ்சம் நேரம் இருந்தது. இப்போது புளோரிடா ஆடுகளத்தில் 180+ நிலைமைகள் இருக்க வேண்டும். இந்த போட்டியில் ஒரு நல்ல தொடக்கம் முக்கியம். மேலும் சுப்மான் கில் பார்முக்கு திரும்பியது அணிக்கு நல்ல அறிகுறி”
ஹர்திக் பாண்டியா மனதில் வெவ்வேறு உத்திகள் இருக்கலாம். குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திரா சாஹலை மிடில் ஓவர்களில் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் மற்றும் பவர்பிளேயில் நிக்கோலஸ் பூரன் பேட் செய்ய வருவதற்கு முன்பு அக்சர் படேலைப் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தின் அடிப்படையில், அவர்கள் குறிப்பாக கைல் மேயர்ஸுக்கு எதிராக ஆக்சரைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம என்றார் ஆகாஷ் சோப்ரா.




