மேற்கிந்திய தீவுகளுக்கு இந்திய அணியானது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது, இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்ற நிலையில் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் அதற்கு அடுத்ததாக டி20 போட்டியானது நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் சிற்ப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்தியாவை வீழ்த்தியது.

இதன் மூலம் 5 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியானது வெற்றி பெற்றது. மறுபுறம் இந்தியா மிகவும் மோசமான கிரிக்கெட்டை விளையாடியது. குறிபாக சூரியகுமார், இஷான் கிஷான், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா போன்ற நட்சத்திர வீரர்கள் ஏமாற்றம் அளித்த நிலையில் திலக் வர்மா மட்டுமே சிறப்பாக விளையாடினார். இருந்த போதிலும் இந்திய அணியில் வெல்ல முடியவில்லை. இந்நிலையில் தான் நாளை நடக்கும் போட்டியில் இந்தியா வென்றே தீரவேண்டும் என்று களமிறங்குகிறது.
இந்த நிலையில் தான் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் அபினவ் முகுந்த் “இந்தியா தங்களுடைய முதல் போட்டியை தோல்வியை தழுவியத்தினால் அதிலிருந்து அதிகம் கேற்றுக்கொள்ள வேண்டுமா என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இந்தியா இந்த போட்டியில் ஒரு இளம் அணியாக விளையாடுகிறது. மேலும் இந்திய அணியானது நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 விளையாடுகிறார்கள். நிறைய புதிய முகங்கள் வந்துள்ளானர், பேட்டிங் ஆர்டரும் மாறியுள்ளது.

ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா போன்ற மூத்த வீரர்களும், பும்ராவும் ஷமியும் இந்த போட்டியில் பந்து வீசவில்லை. இதனால் இதனை நான் பெரிய தோல்வியாக பார்க்கவில்லை. இந்தியா விளையாட்டை நன்றாக அணுகியதாக எனக்கு தோன்றுகிறது. இறுதியில் அவர்கள் சில தவறுகளைச் செய்தார்கள், ஆனால் ஒட்டுமொத்த அணுகுமுறை அது சரியாக வந்தால், இந்தியா வெற்றி பெறும் என்று நான் நினைக்கிறேன்.
இந்தியாவின் பேட்டிங் என்னைப் பொறுத்தவரை டிரினிடாட் மைதானம் மற்றும் அங்குள்ள சூழ்நிலையை பொறுத்தது என்று நான் நினைக்கிறேன். ஆடுகளம் மெதுவாக இருப்பதாகவும், அதிரடியாக விளையாடுவதற்கு தடையாக இருந்ததாகவும் மைதானம் இருந்ததால் அதிக ரன்கள் வரவில்லை என்று தோன்றுகிறது. இரண்டாவது டி 20 போட்டியை பொறுத்தவரையில் இந்தியா மற்றொரு மெதுமான மைத்தனத்தின் விக்கெட்டையே எதிர்பார்க்கும் என்று தோன்றுகிறது.

எனவே இந்திய அணியின் அதிரடி வீரரான இஷான் கிஷான் போன்ற ஒருவருக்கும் ஒரு திலக் வர்மா போன்ற ஒருவருக்கும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஒருவேளை சூர்யகுமார் யாதவ் கூட இன்னும் சில பெரிய ஷாட்களை விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம் என்றார் அபினவ் முகுந்த்.




