மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.

இதனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றியடைந்தே ஆகவேண்டும் என்று சூழ்நிலையில் யஷஸ்வி மற்றும் சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு பொறுமையாக நின்று விளையாடிய திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவருமே இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு முக்கியமான ஒரு காரணமாக இருந்தார்கள். ஏனென்றால் விக்கெட்டுகள் விழுந்த போது வந்த இவர்கள் இருவரும் பொறுமையாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
மேலும் கடந்த 2 இந்தியா மிகவும் மோசமாக விளையாடிய நிலையில் திலக் வர்மா மட்டுமே அற்புதமாக விளையாடினார். சொல்லப்போனால் முதல் போட்டியில் 39 ரன்களும் இரண்டாவது போட்டியில் 51 ரன்களையும் எடுத்து இந்தியா அணிக்கு மோசமான தோல்வியை சந்திக்காமல் இருக்க போராடினர். அதே போலத்தான் 3வது போட்டியிலும் திலக் வர்மா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 49 ரன்களை விளாசியிருந்தார்.

இதன் மூலம் திலக் வர்மா அடுத்து வரும் டி20 போட்டிகளிலும் விளையாடுவார் என்பது தெரிகிறது. அதே நேரத்தில் இதே போல இவர் விளையாடும் பட்சத்தில் அடுத்த வருடம் வரும் உலக கோப்பை டி20 போட்டியில் இடம் கிடைக்கவும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான அபினவ் முகுந்த் திலக் வர்மா குறித்து பேசியுள்ளார்.
திலக் வர்மா பேட்டி :
அவர் குறித்து திலக் வர்மா பேசுகையில் “திலக் வர்மா தன்னுடைய பாணியில் சரியாக விளையாடுகிறார். அது ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பாக மாறியது. திலக் வர்மா விருப்பமின்றி எதையும் செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் தன்னுடைய விளையாட்டை விளையாடிக்கொண்டே ஒவ்வொரு பந்திலும் ஒவ்வொரு ஓவரிலும் சூர்யகுமார் யாதவ் திரடியாக் விளையாடி கொண்டிருந்தபோது, அவரும் அதிரடி வழியில் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த இடத்தில் அவருடைய முதிர்ச்சி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவர் மைதானத்தில் எல்லா இடங்களிலும் ரன்களை அடிக்க பார்த்தார். பினிஷிங் மிகவும் நன்றாக இருந்தது மற்றும் இது இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல அறிகுறியாக இருக்கிறது. ராபின் உத்தப்பா போன்ற ஒருவரிடமிருந்து திலக் வர்மா உயர்ந்த பாராட்டுகளைப் பெற்றுள்ளர். மேலும் யுவராஜ் சிங் போன்ற ஒருவருடன் ஒப்பிடும் வகையில் திலக் வர்மாவின் பேட்டிங் அவருக்கு பிடித்திருக்கிறது. இந்தத் தொடரில் நாம் பார்த்தவற்றிலிருந்து அவர் மற்ற கிரிக்கெட் வடிவங்களின் கதவுகளைத் தட்டுவார் என நினைப்பதாக கூறினார் அபினவ் முகுந்த்.





